ஒன்றரை வருடங்களுக்கு பின் இன்றுதான் நான்  தேநீர் அருந்துகிறேன்; விடுதலையான பலஸ்தீன பணயக் கைதி 

Date:

இஸ்ரேலிய சிறைச்சாலைகளில் பல்வேறு துன்புறுத்தல்களுக்கும் அநியாயங்களுக்கும் ஆளாகியுள்ள நிலையில் பலஸ்தீனியர்கள் தற்போது விடுதலையாகி வருகின்றார்கள்.

இவ்வாறு விடுதலையாகிய அம்மர் அல்-சபென் என்பவர் தனது சிறைவாசத்தின் பயங்கர அனுபவங்களை பகிர்ந்து கொள்ளும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் பரவலாகப் பகிரப்பட்டு வருகிறது.

இவர் சுமார் ஒன்றரை ஆண்டுகள் இஸ்ரேலிய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். விடுதலையாகி எகிப்துக்கு திரும்பியுள்ளார்.  அவர் முதன்முறையாக ஒரு தேநீர் கோப்பையை கையில் ஏந்தி பின்வருமாறு கூறுகிறார்,

கடந்த ஒன்றரை வருட காலமாக ஒரு தேநீர் கோப்பைக் கூட அருந்துகின்ற சந்தர்ப்பம் இல்லாமலாக்கப்பட்ட நிலையில் தண்ணீரோடு மாத்திரம் தன்னுடைய கடினமான நாட்களை கழித்ததாக கூறுகின்றார்.

அந்த துயரத்தை அவர் கூறுகின்ற போது உண்மையிலே பலஸ்தீன பணயக் கைதிகள் அந்த இஸ்ரேலிய சிறைகளில் எவ்வளவு துன்புறுத்தல்களுக்கு உள்ளாக்கப்பட்டிருக்கின்றார்கள் என்பதை கற்பனை செய்து பாருங்கள்.

இவருடைய இந்த உருக்கமான  கருத்துக்கள் பலஸ்தீன கைதிகள் சிறைகளில் சந்திக்கும் துன்பங்களை உலகிற்கு எடுத்துக் காட்டுகிறது. இஸ்ரேலிய அதிகாரிகள் பலஸ்தீன கைதிகளை மனதளவில் மற்றும் உடலளவிலும் தாக்கி, அடக்குமுறைக்கு உள்ளாக்குவதாக பல்வேறு மனித உரிமை அமைப்புகள் தெரிவித்துள்ளன.

Popular

More like this
Related

டிரம்பின் ‘அமைதித் திட்டம்’ வெற்றியளிக்குமா?

உண்மையில் காசா பகுதியை உள்ளடக்கிய மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் மோதல் அக்டோபர்...

பிரதமர் சீனாவிற்கு விஜயம்

“பெண்கள் மீதான உலகளாவிய தலைவர்கள் கூட்டத்தில்” கலந்து கொள்வதற்காக பிரதமர் கலாநிதி...

இளைஞர்களுக்கான விழிப்புணர்வு கருத்தரங்கு!

INSIGHT நிறுவனத்தின் புத்தளம் வளாகம் ஏற்பாடு செய்துள்ள 'இளைஞர்களை தொழில்முனைவராக்கும்  பயணம்...

சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு Amazon உயர்கல்வி நிறுவனம் அனாதை இல்லத்திற்கு விஜயம்

சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு Amazon உயர்கல்வி நிறுவனம் 2025.10.5 திகதி...