கணேமுல்ல சஞ்சீவ கொலை சம்பவம்; சிறைச்சாலை அதிகாரிக்கு விளக்கமறியல்

Date:

கணேமுல்ல சஞ்சீவ கொலை சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட பூஸா சிறைச்சாலை அதிகாரி ஒருவரை எதிர்வரும் 21 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் நேற்று கொழும்பு மேலதிக நீதவான் ஹர்ஷன கெக்குனவல முன்னிலையில் கொழும்பு குற்றவியல் பிரிவினால் ஆஜர்படுத்தப்பட்ட போதே மேற்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது

இதேவேளை சந்தேகநபர் கடமை தவறியதன் காரணமாக இந்தக் குற்றம் நடந்ததா என்பதைக் கண்டறிய விசாரணை நடத்தி வருவதாக பொலிஸார் நீதிமன்றத்தில் தெரிவித்திருந்ததுடன் துப்பாக்கிச் சூடு நடத்தி தப்பிச்சென்ற சந்தேக நபரைக் கைது செய்ய சந்தேகநபர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பது விசாரணைகளில் தெரியவந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும் சந்தேக நபரின் கையடக்க தொலைபேசி அழைப்புகளின் பதிவை பெற்றுக்கொள்வதற்கு அனுமதி வழங்குமாறும் நீதிமன்றில் பொலிஸார் கோரிக்கை விடுத்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

இலங்கையில் நாளொன்றுக்கு 5 பேர் கிட்னி நோயினால் இறக்கின்றனர்: சுகாதார மேம்பாட்டுப் பணியகம்

நாட்டில் சிறுநீரக நோய்கள் காரணமாக ஆண்டுதோறும் சுமார் 1,600 பேர் உயிரிழக்கின்றனர்....

கொழும்பில் நாளை நீர் விநியோகம் துண்டிக்கப்படாது!

கொழும்பு உள்ளிட்ட பல பகுதிகளில் நாளை (18) காலை 10.00 மணி...

இஸ்ரேலை ஐநாவிலிருந்து இடை நிறுத்துக: பலஸ்தீனுக்கு முழு உறுப்புரிமை வழங்குக-தேசிய ஆலோசனை சபை கோரிக்கை

ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸுக்கு தேசிய சூறா...

கற்றல் கற்பித்தல் தொடர்பிலான அமேசனின் விசேட செயலமர்வு BMICH இல்!

அமேசன் உயர்கல்வி நிறுவனத்தின் ஏற்பாட்டில் கற்பித்தல் மற்றும் கற்றலில் மன உறுதி...