‘கனடா ஒருபோதும் அமெரிக்காவின் திமிருக்கு அடிபணியாது’ கனடாவின் புதிய பிரதமர் மார்க் கார்னி

Date:

கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ விலகலை தொடர்ந்து, கனடாவின் புதிய பிரதமராக மார்க் கார்னி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

பொருளாதார ரீதியாக கனடா தற்போது பல்வேறு பிரச்சினைகளை சந்தித்து வருகிறது.

மேலும், அமெரிக்க ஜனாதிபதியாக பதவியேற்ற டொனால்டு ட்ரம்ப், கனடா பொருட்களுக்கு வரியை அதிகரிப்பது தொடர்பான அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். இது கனடா அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதற்கிடையில், கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ(வயது 53), தனது பதவியை ராஜினாமா செய்வதாக கடந்த ஜனவரி மாதம் அறிவித்தார்.

லிபரல் கட்சியின் தலைவரான ஜஸ்டின் ட்ரூடோ, கடந்த 2015-ம் ஆண்டு முதல் கனடாவின் பிரதமராக பதவி ஏற்றார். அவர் பதவி விலகியதை தொடர்ந்து, லிபரல் கட்சியின் அடுத்த தலைவரை தேர்வு செய்வதற்கான தேர்தல் நடைபெற்றது.

பிரதமராக தேர்வு செய்யப்பட்டுள்ள மார்க் கார்னி, கடந்த 2008 முதல் 2013 வரை கனடா வங்கியின் கவர்னராக பதவி வகித்தார். அதோடு, 2011 முதல் 2018 வரை நிதி நிலைத்தன்மை வாரியத்தின் தலைவராகவும் பணியாற்றினார்.

தேர்தலில் வெற்றியடைந்த மார்க் கார்னி கூறுகையில்,

நாங்கள் தயாரிக்கும் பொருட்கள், நாங்கள் விற்கும் பொருட்கள் மற்றும் எங்கள் வாழ்வாதாரத்தின் மீது  ட்ரம்ப் நியாயமற்ற வரிகளை விதித்துள்ளார். அமெரிக்கா, கனடா அல்ல. கனடா ஒருபோதும், ஒருபோதும் அமெரிக்காவின் ஒரு பகுதியாக இருக்காது. அமெரிக்கா நம் இயற்கை வளங்களையும், குடிநீரையும், நிலத்தையும், கூடவே முழு கனடா நாட்டையும் அடக்கி ஆள விரும்புகிறது.

கனடா ஒருபோதும், எந்த வகையிலும், வடிவத்திலும் அமெரிக்காவின் திமிருக்கு அடிபணியாது. நாங்கள் ஒரு போதும் அமெரிக்காவின் மாகாணமாக இணைய மாட்டோம். அமெரிக்கர்கள் எங்களுக்கு மரியாதை காட்டும் வரை எனது அரசாங்கம் கட்டணங்களை குறைக்காது.

இது அவர்களுடைய நடவடிக்கையை பார்க்கும்போதே நமக்கு தெரிகிறது.  ட்ரம்ப், கனடாவின் தொழிலாளர்களையும், குடும்பங்களையும், வணிகங்களையும் பாதிக்க வைக்கும் விஷயங்களை செய்து வருவதாகவும் அவர் குற்றம்சாட்டினார்..

அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பை சமாளிக்க மிகவும் நம்பகமான அரசியல்வாதியாக கனடா நாட்டு மக்கள் அவரை அங்கீகரிப்பதாக கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன.

மார்க் கார்னி ஒருமுறை டொனால்டு ட்ரம்ப்பை ‘ஹாரி பாட்டர்’ கதையில் வரும் வில்லன் கதாபாத்திரமான வோல்டெமார்ட்டுடன் ஒப்பிட்டு பேசியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

 

 

 

Popular

More like this
Related

பாகிஸ்தானை ஜனநாயக இஸ்லாமிய நலன்புரி நாடாக மாற்றுதல் என்ற தொனிப்பொருளில் கொழும்பில் நடைபெற்ற பாகிஸ்தானின் சுதந்திர தின நிகழ்வு

பாகிஸ்தான் உயர் ஸ்தானிகராலயம் இலங்கையிலுள்ள பாகிஸ்தான் சமூகத்தினருடன் இணைந்து பாகிஸ்தானை வலுவான,...

கல்வியில் எதிர்பார்க்கப்படும் இலக்குகளை அடைந்துகொள்வதற்கான தன்னார்வ ஆலோசனை சபை நியமனம்: துறைசார்ந்த முஸ்லிம்கள் எவரும் இல்லை!

கல்வித் துறையில் தரமான வளர்ச்சியை ஏற்படுத்தும் நோக்கிலான புதிய அரசாங்கத்தின் கொள்கைகளுக்கு...

‘செம்மணி’ நூல் வெளியீடும் கலந்துரையாடலும் இன்று..!

தரிந்து ஜயவர்தன, தரிந்து உடுவரகெதர மற்றும் எம்.எப்.எம்.பஸீர் ஆகியோர் இணைந்து எழுதிய...

கம்பஹாவின் பல பகுதிகளில் 10 மணி நேர நீர்வெட்டு

கம்பஹா மாவட்டத்தின் பல பகுதிகளில் இன்று (14) 10 மணி நேர...