‘பலஸ்தீன செஞ்சிலுவை சங்கம் மற்றும் செம்பிறை சங்கத்தைச் சேர்ந்த எட்டு மருத்துவர்கள் தெற்கு காசாவின் ரஃபாவில் பணியில் இருந்தபோது இஸ்ரேலியப் படைகளால் கொல்லப்பட்டதற்கு சர்வதேச செஞ்சிலுவை மற்றும் செம்பிறை சங்கங்களின் கூட்டமைப்பு (IFRC) கண்டனங்களை தெரிவித்துள்ளது.

கொல்லப்பட்டவர்களில் Mustafa Khafaja,
• Ezmdine Sha’at
• Saleh Moammar
• Rifaat Radwan
• Mohammad Behloul
• Ashraf Abu Labda
• Mohammad Al-Hila
• Raed Al-Sharif ஆகியோராவர்.

மார்ச் 23 அன்று அல்-ஹஷாஷினில் ஒன்பது பேர் கொண்ட அம்பியூலன்ஸ் குழு மீது கடுமையான தாக்குதல் நடத்தப்பட்டதாக IFRC தெரிவித்துள்ளது.

ஒரு வாரமாக அனுமதி மறுக்கப்பட்ட பின்னர் ஞாயிற்றுக்கிழமை அவர்களின் உடல்கள் மீட்கப்பட்டன. ஒரு மருத்துவர் இன்னும் காணவில்லை.

பலஸ்தீன ரெட் க்ரெசண்ட் சொசைட்டி (PRCS), தங்கள் ஊழியர்களின் உடல்களும், காசாவின் ஹமாஸ் நடத்தும் சிவில் பாதுகாப்பு நிறுவனத்தின் ஆறு உறுப்பினர்களின் உடல்களும், ஒரு ஐ.நா. ஊழியரின் உடல்களும் கண்டெடுக்கப்பட்டதாகக் கூறியது.

அந்த வாகனத் தொடரணி மீது யார் துப்பாக்கிச் சூடு நடத்தினர் என்பதை அவர்கள் கூறவில்லை – ஆனால் ஹமாஸ் இந்த தாக்குதலுக்கு இஸ்ரேல் பாதுகாப்புப் படைகளைக் குற்றம் சாட்டியது.

மூத்த ஹமாஸ் அதிகாரி பாசெம் நைம் இந்தத் தாக்குதலைக் கண்டித்துள்ளார்.

“சர்வதேச மனிதாபிமான சட்டத்தின் கீழ் பாதுகாக்கப்பட்ட மீட்புப் பணியாளர்களை குறிவைத்து கொல்வது ஜெனீவா உடன்படிக்கைகளை அப்பட்டமாக மீறுவதாகவும், போர்க்குற்றமாகவும் அமைகிறது” என்று அவர் கூறினார்.

ஜனவரியில் தொடங்கிய முதல் கட்ட போர் நிறுத்தம் முடிவடைந்து, ஒப்பந்தத்தின் இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தைகள் முடங்கிய பின்னர், மார்ச் 18 அன்று காசாவில் இஸ்ரேல் தனது இராணுவத் தாக்குதலை மீண்டும் தொடங்கியது.

காசாவில் இஸ்ரேலிய தாக்குதல்களில் 900 க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதாக ஹமாஸ் நடத்தும் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இஸ்ரேல் ஒரு பெரிய இராணுவத் தாக்குதலுடன் பதிலளித்தது, இது 50,000 க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்களைக் கொன்றது என்று காசாவின் ஹமாஸ் நடத்தும் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.