கிழக்கு மாகாணத்தில் இஸ்லாமிய தீவிரவாத குழுவொன்று செயற்படுவது குறித்து தகவல்கள் கிடைத்துள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் நளிந்த ஜெயதிஸ தெரிவித்துள்ளார்.
இந்த தீவிரவாத குழு குறித்து மேலதிக விபரங்களை பெறுவதற்கான முயற்சிகளில் பொலிஸாரும் இராணுவத்தினரும் ஈடுபட்டுள்ளனர் என தெரிவித்துள்ள அவர் ஜனாதிபதி இது குறித்து ஏற்கனவே நாடாளுமன்றத்தில் சில தகவல்களை தெரிவித்துள்ளர் என குறிப்பிட்டுள்ளார்.
இந்த அமைப்பின் செயற்பாடுகள் காணப்படுகின்ற போதிலும் பாதுகாப்பு தரப்பினர் மிகுந்த எச்சரிக்கை நிலையில் உள்ளனர் என அமைச்சரவை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
கடந்த ஒக்டோபர் மாதம் கிழக்கில் அருகம்பை பிரதேசத்தில் உள்ள இஸ்ரேலிய சபத் தேவாலயம் மீது, தாக்குதல் நடத்தப்போவதாக செய்திகள் வெளிவந்ததைத் தொடர்ந்து, அங்கு ஏற்கனவே பாதுகாப்பு பலப்பட்டிருந்தது.