குப்பைத் தொட்டியில் இஸ்ரேலுக்கு எதிராக ஸ்டிக்கர் ஒட்டிய இளைஞர் பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினரால் தடுத்து வைப்பு

Date:

கொம்பனித்தெரு பகுதியில் உள்ள வர்த்தக நிறுவனமொன்றில் பணியாற்றும் முஸ்லிம் இளைஞர் ஒருவர் காசாவில் இஸ்ரேல் மேற்கொண்டு வரும் அநியாயங்களுக்கு எதிராக ஸ்டிக்கர் ஒட்டிய காரணத்தினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

நிட்டம்புவ பிரதேசத்தைச் சேர்ந்த இந்த 20 வயது இளைஞர் கொம்பனித்தெரு பொலிஸ் நிலைய பகுதியிலுள்ள வணிக வளாகத்தில் உள்ள கடையொன்றில் விற்பனையாளராக பணிபுரிந்து வந்துள்ளார்.

சில நாட்களுக்கு முன்பு காசாவில் அப்பாவி பொதுமக்கள் மீது இஸ்ரேல் நடத்தும் அட்டூழியங்களுக்கு எதிராக வணிக வளாகத்தில் உள்ள குப்பைத் தொட்டியில் இரண்டு ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டிருந்தன.

இந்த புகைப்படம் தொடர்பில் கொம்பனித்தெரு காவல் துறைக்கு தகவல் கிடைத்த பின்னர் சிசிடிவி துணையுடன் ஸ்டிக்கர் ஒட்டிய நபரை பொலிஸார் அடையாளம் கண்டுள்ளனர்.

22 ஆம் திகதி காலை குறித்த இளைஞன் தனது பணியிடத்திற்கு வரும்போது அவர் கைது செய்யப்பட்ட நேரத்தில் பயங்கரவாத புலனாய்வு பிரிவும் அரசப் புலனாய்வு பிரிவும் அங்கிருந்துள்ளன.

மேலதிக விசாரணைகளுக்காக பயங்கரவாத புலனாய்வு பிரிவினரிடம் (TID) ஒப்படைக்கப்பட்டுள்ள அவர் தற்போது தடுப்புக்காவல் உத்தரவின் கீழ் பயங்கரவாத புலனாய்வு பிரிவில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

Popular

More like this
Related

மத மற்றும் கலாசார விவகாரங்களுக்கான புதிய பிரதி அமைச்சராக முனீர் முலஃபர் கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்

மத மற்றும் கலாச்சார விவகாரங்களுக்கான புதிய பிரதி அமைச்சராக  முனீர் முலாஃபர்...

பாலின சமத்துவத்தை முழுமையாக அடைய தொடர்ச்சியான அர்ப்பணிப்பு தேவை: பிரதமர்

பெண்கள் மற்றும் பெண் பிள்ளைகளின் உரிமைகள் மற்றும் நல்வாழ்வை முன்னேற்றுவதற்கும், சமத்துவம்...

கல்வி சீர்திருத்தங்களின் கீழ் பாடசாலை நேரம் நீடிப்பு: கல்வியமைச்சு

நடைமுறைப்படுத்தப்படவுள்ள கல்வி சீர்திருத்தங்களின் கீழ் பாடசாலை நேரம் பிற்பகல் 2 மணி...

கல்கிஸ்ஸை சட்டத்தரணி தாக்குதல் சம்பவம்; பொலிஸ் அதிகாரிக்கு பிணை

கல்கிஸ்ஸை நீதிமன்ற வளாகத்திற்குள் பொலிஸ் அதிகாரியொருவர் சட்டத்தரணியொருவரைத் தாக்கிய சம்பவம் தொடர்பாக...