எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தியைப் பிரதிநிதித்துவப்படுத்தி கொழும்பு மாநகர சபைக்கான மேயர் வேட்பாளராக வைத்தியர் ருவைஸ் ஹனிஃபா களமிறங்கவுள்ளார்.
மருத்துவ நிபுணரான ஹனிஃபா, நீர்கொழும்பு, அம்பாறை மற்றும் ஸ்ரீ ஜயவர்தனபுரவிலுள்ள மருத்துவமனைகளில் பணியாற்றியுள்ளார், ஆயிரக்கணக்கான நோயாளிகளின் பராமரிப்பிற்கு பங்களித்துள்ளார்.
இலவசக் கல்வியை வலுப்படுத்துவதில் சிறப்பு கவனம் செலுத்தி, களனி மற்றும் கொழும்பு பல்கலைக்கழகங்களின் மருத்துவ பீடங்களில் தற்போது விரிவுரை செய்யும் ஒரு கல்வியாளரும் ஆவார்.
மேலும் கொழும்பு பல்கலைக்கழகத்தில் குடும்ப சுகாதார பிரிவை நிறுவிய நிறுவன உறுப்பினர்களில் ஒருவராகவும் காணப்படுகின்றார்.