க.பொ.த. சாதாரண பரீட்சை: மேலதிக வகுப்புகளுக்கு நள்ளிரவு முதல் தடை!

Date:

2024 (2025) க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை எழுதும் பரீட்சார்த்திகளுக்கான அனைத்து மேலதிக வகுப்புகள், விரிவுரைகள், பயிற்சிப் பட்டறைகள் என்பன இன்று (11) முதல் தடைசெய்யப்பட்டுள்ளன.

இந்தத் தடை 2025 மார்ச் 11 நள்ளிரவு முதல் குறித்த பரீட்சைகள் நிறைவு பெறும் வரை அமலில் இருக்கும் என்று இலங்கை பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

2024 (2025) க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை மார்ச் 17 முதல் 26 வரை 3663 பரீட்சை நிலையங்களில் நடைபெறவுள்ளது. இந்த ஆண்டு 474,147 பரீட்சார்த்திகள் பரீட்சை எழுத தகுதி பெற்றுள்ளனர்.

மாணவர்களுக்கு விநியோகிப்பதற்காக பரீட்சை அனுமதி அட்டைகள் ஏற்கனவே அனுப்பப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையர் நாயகம் அமித் ஜெயசுந்தர குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, குறித்த பரீட்சைக்காக மார்ச் 11 ஆம் திகதிக்கு பின்னர் நடத்தப்படும் எந்தவொரு மேலதிக வகுப்புகள் மற்றும் விரிவுரைகள் தொடர்பில் பொதுமக்கள் தகவல் தெரிவிக்குமாறு பொலிஸார் கேட்டுக் கொண்டுள்ளனர்.

மேற்கண்ட திகதிக்கு அப்பால் நடைபெறும் எந்தவொரு கல்வி வகுப்புகள், கருத்தரங்குகள், பட்டறைகள் அல்லது ஆன்லைன் அமர்வுகள் குறித்து பின்வரும் தொடர்பு எண்கள் மூலம் தெரிவிக்கலாம் என்று பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

  • பொலிஸ் தலைமையகம் – 0112421111
  • பொலிஸ் அவசர துரித எண் – 119
  • இலங்கை பரீட்சைகள் திணைக்களம் – 1911
  • மேலும் – 011 278 4208 / 011 278 4537.

 

 

 

Popular

More like this
Related

சஜின் வாஸ் குணவர்தன மார்ச் 24 வரை விளக்கமறியலில்!

நிதிக்குற்ற விசாரணை பிரிவினரால் இன்று கைது செய்யப்பட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்...

ரியாத், துபாய்க்கான தினசரி விமான சேவைகள் மீண்டும் ஆரம்பம்!

மத்திய கிழக்கில் நிலவும் மோதல் நிலைமைகளுக்கு மத்தியில் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த ரியாத்...

மத்திய கிழக்கில் நிலவி வரும் போர் காரணமாக உலகளாவிய ரீதியாக பணவீக்கம் ஏற்படும்: சர்வதேச நாணய நிதியம் எச்சரிக்கை!

மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர்சூழல் காரணமாக எரிபொருள் பாதுகாப்பு உயர்மட்ட பேசுபொருளாக...

சஜின் வாஸ் குணவர்தன கைது!

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்தன இன்று (9) இலஞ்ச...