சர்வதேச மனித உரிமை சட்ட விவாத போட்டியில் கலந்துகொள்வதற்காக யாழ்ப்பாண பல்கலைக்கழக அணி ஹொங்கொங் பயணம்

Date:

ஹொங்கொங்கில் இன்று ஆரம்பமாகும் Red Cross International Humanitarian Law Moot-2025இல் கலந்துகொள்வதற்காக இலங்கையிலிருந்து யாழ்.பல்கலைக்கழக அணி தெரிவாகியுள்ளது.

இந்த அணியின் சார்பில் போட்டியில் கலந்துகொள்வதற்காக சுபாஷினி ருமணன், துலாஞ்சி செனூரிநதி யாப்பா பண்டார, ஹம்னா அஸூர், தேஜாஸ்வினி பிலிப்ஸ், ஆகியோர் ஹொங்கொங் பயணமாகியுள்ளனர்.

2003 ஆம் ஆண்டிலிருந்து ஆசிய பசுபிக் பல்கலைக்கழகங்களுக்கிடையில் இந்த சர்வதேச மனித உரிமை சட்டங்கள் தொடர்பிலான போட்டி ஹொங்கொங்கில் நடைபெற்று வருகின்றது.

ஒவ்வொரு வருடமும் இந்த போட்டியில் உள்ளூரிலும் பிராந்திய ரீதியாகவும் 100க்கும் மேற்பட்ட சட்டபீடங்கள் கலந்து கொள்கின்றன. அவற்றில் 20 அணிகள் சர்வதேச போட்டிக்காக தெரிவு செய்யப்படுகின்றன.

ஹொங்கொங் செஞ்சிலுவை சங்கம் சர்வதேச செஞ்சிலுவை சங்கம் இணைந்து நடத்தும் இப்போட்டி இன்றிலிருந்து 15 ஆம் திகதி வரை நடைபெறும்.

இப்போட்டியில் நீர்கொழும்பை சேர்ந்த ஹுஸ்னி ஸராப் ஆசிரியரின் புதல்வி  ஹம்னா அஸூர் போட்டியில் வாதிடுபவராக (Mooter) கலந்துகொள்கிறார்.

Popular

More like this
Related

நாட்டின் பெரும்பான்மையான பகுதிகளில் மழை

நாட்டின் பெரும்பான்மையான பகுதிகளில் இன்றைய தினம் மழை பெய்யுமென வளிமண்டலவியல் திணைக்களம்...

முதலில் சுடுவோம்; பிறகுதான் பேசுவோம்: அமெரிக்காவுக்கு டென்மார்க் எச்சரிக்கை

கிரீன்லாந்துக்குள் அமெரிக்க வீரா்கள் நுழைந்தால், தளபதிகளின உத்தரவுக்காக காத்திராமல் தங்கள் நாட்டு...

தற்காலிகமாக செயலிழந்த பொதுப் பாதுகாப்பு அமைச்சின் இணையத்தளம்!

பொது மக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகாரங்கள் அமைச்சின் இணையத்தளத்தைப் பயன்படுத்துவது...

அம்புலுவாவ மலையில் அனைத்து கட்டுமானப் பணிகளையும் நிறுத்த உத்தரவு

அம்புலுவாவ மலையில் அனைத்து கட்டுமானப் பணிகளையும் நிறுத்த தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு...