2024 க.பொ.த சாதாரணதர பரீட்சை; மேலதிக வகுப்புக்களுக்குத் தடை..!

Date:

2024 (2025) க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை எழுதும் பரீட்சார்த்திகளுக்கான அனைத்து மேலதிக வகுப்புகள், விரிவுரைகள், பயிற்சிப் பட்டறைகள் என்பன எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (11) முதல் தடைசெய்யப்பட்டுள்ளன.

இந்தத் தடை 2025 மார்ச் 11 நள்ளிரவு முதல் குறித்த பரீட்சைகள் நிறைவு பெறும் வரை அமலில் இருக்கும் என்று இலங்கை பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

2024 (2025) க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை மார்ச் 17 முதல் 26 வரை 3663 பரீட்சை நிலையங்களில் நடைபெறவுள்ளது.

இந்த ஆண்டு 474,147 பரீட்சார்த்திகள் பரீட்சை எழுத தகுதி பெற்றுள்ளனர். மாணவர்களுக்கு விநியோகிப்பதற்காக பரீட்சை அனுமதி அட்டைகள் ஏற்கனவே அனுப்பப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையர் நாயகம் அமித் ஜெயசுந்தர நேற்று (06) ஊடகங்களுக்கு தெரிவித்தார்.

மேலும், அனுமதி அட்டைகளில் ஏதேனும் மாற்றங்களை 2025 மார்ச் 10 ஆம் திகதிக்கு முன்னர் பரீட்சைகள் திணைக்களத்தின் www.doenets.lk வலைத்தளத்தின் மூலம் ஆன்லைனில் மேற்கொள்ளலாம்.

Popular

More like this
Related

நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகள் அதிகரிப்பு

இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் இன்று (21) நள்ளிரவு 12.00 மணி முதல்...

உலக நாடுகளின் எரிபொருள் விலையேற்றம்

அண்மையில் வெளியான உலக எரிபொருள் விலையேற்றத்திற்கமைய பல நாடுகளில் 20 வீதத்திற்கும்...

இலங்கைக்கான சவூதி அரேபியத் தூதுவரின் பெருநாள் வாழ்த்துச் செய்தி

புனித ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாளை முன்னிட்டு, இலங்கைக்கான சவூதி அரேபியத்...

ஜனாதிபதியின் ஈகைத் திருநாள் வாழ்த்துச் செய்தி!

உலகெங்கிலும் உள்ள முஸ்லிங்கள் ஒரு மாதம் முழுவதும் நோன்பு நோற்று, அதன்...