படத்தில் காட்டப்பட்டுள்ள இந்த இருவரும் தற்போது உயிருடன் இல்லை. நேற்று காசாவில் மேற்கொள்ளப்பட்ட இஸ்ரேலின் மோசமான தாக்குதல்களினால் இவ்விருவரும் குடும்பத்தாருடன் முற்றாக படுகொலை செய்யப்பட்டனர்.
இந்த வாலிபர் வேறு யாருமில்லை அல்-குட்ஸ் படைப்பிரிவின் அதிகாரப்பூர்வ செய்தித் தொடர்பாளர் அபு ஹம்சா (25).
அவருடைய வீட்டை குறிவைத்து இஸ்ரேலிய வான்வழித் தாக்குதல் நடத்தியதில் அபு ஹம்சா அவரது மனைவி ஷைமா அபு சீஃப், அவரது சகோதரர் கசான் மஹர் அபு சீஃப், அவரது மனைவி சாரா அபு சீஃப் மற்றும் அவர்களது குழந்தைகள் கொல்லப்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
அபு ஹம்சா ஒரு முக்கிய ஊடக நபராக இருந்தவர், பத்திரிகையாளர் சந்திப்புகள் மற்றும் அறிக்கைகளில் அடிக்கடி தோன்றி, முகமூடி அணிந்துகொண்டு அல்-குட்ஸ் படைப்பிரிவுகளின் செய்திகளையும் நிலைப்பாடுகளையும் பொதுமக்களுக்குத் தெரிவித்து வந்தார்.
பேருந்து ஓட்டுநராகப் பணிபுரிந்த அவர், அவரது பேச்சுத்திறன் மற்றும் இராணுவ மற்றும் தொழில்நுட்ப நிபுணத்துவம் மூலம் பாதுகாப்புக் குழுவின் தலைமைப் பதவிக்கு உயர்ந்தார். பலஸ்தீனியர்கள் அபு ஹம்சாவின் வார்த்தைகளை மிகுந்த ஆர்வத்துடன் கேட்டார்கள்.
அபு ஹம்சா தனது போராட்டப் பயணம் முழுவதும் பலஸ்தீனியர்களுக்குத் தெரியாமல் இருந்தார். ஆனால் அவர் மக்கள் மிகவும் நேசித்த ஒரு ஆளுமை. உலகின் மிக சக்திவாய்ந்த படைகளில் ஒன்றிற்கு எதிரான பாதுகாப்பின் செய்தித் தொடர்பாளராக அவர் இருந்துள்ளார்.
இஸ்ரேல் கூறுவது போல் அவர்கள் ஆடம்பரமான பதுங்கு குழிகளில் தங்கவில்லை.
இருவரும் இறப்பதற்கு ஒரு வாரத்திற்கு முன்பு திருமணம் செய்து கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
விரல் விட்டு எண்ணக்கூடிய சில நாட்கள் அல்லது மணிநேரங்கள் கூட அவர்கள் இருவரும் சேர்ந்து வாழ்ந்திருக்க மாட்டார்கள். இறுதியாக, இஸ்ரேலிய குண்டுவெடிப்பில் ஒன்றாக கொல்லப்பட்டனர்.
அவர்களது தேனிலவு காலத்தை அனுபவிக்க வேண்டிய நேரத்தில் படுகொலைச் சம்பவத்தில் பலியாகியுள்ளனர்.
இவர்கள் சொர்க்கத்தில் தேனிலவு காலத்தை அனுபவிக்கும் நிலையை அல்லாஹ் அவர்களுக்கு ஏற்படுத்த வேண்டும்.