தர்மசக்தி அமைப்பு மற்றும் கொள்ளுப்பிட்டி மஸ்ஜித் கூட்டமைப்பு இணைந்து நடாத்தும் ‘மதங்களுக்கு இடையேயான இப்தார் நிகழ்வு’ எதிர்வரும் வியாழக்கிழமை, 20 ஆம் திகதி மாலை 5 மணி முதல் ஸ்ரீ இசிபதனாராம விகாரையில் இடம்பெறவுள்ளது.
இந்நிகழ்வுக்கு தர்மசக்தி அமைப்பின் தலைவரும், அமரபுர மகா நிக்காயவின் மகாநாயக்க தேரர் மாதம்பாகம அஸ்ஸஜி திஸ்ஸ தேரர் தலைமை தாங்கவுள்ளார்.
பிரதம விருந்தினராக மேல்மாகாண ஆளுநர் ஹனீப் யூசுப், கெளரவ விருந்தினர்களாக புத்தசாசன, மத மற்றும் கலாச்சார அலுவல்கள் பிரதி அமைச்சர் கமகெதர திஸாநாயக்க, இளைஞர் விவகார பிரதி அமைச்சர் எரங்க குணசேகர கலந்துகொள்ளவுள்ளனர்.
மேலும் சிறப்பு அழைப்பாளராக முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் எம்.எஸ்.எம்.நவாஸ் அவர்களும் கலந்துகொள்ளவுள்ளார்.