தர்மசக்தி அமைப்பு மற்றும் கொள்ளுப்பிட்டி மஸ்ஜித் கூட்டமைப்பு நடாத்தும் மதங்களுக்கு இடையேயான இப்தார் நிகழ்வு

Date:

தர்மசக்தி அமைப்பு மற்றும் கொள்ளுப்பிட்டி மஸ்ஜித் கூட்டமைப்பு இணைந்து நடாத்தும் ‘மதங்களுக்கு இடையேயான இப்தார் நிகழ்வு’ எதிர்வரும் வியாழக்கிழமை, 20 ஆம் திகதி மாலை 5 மணி முதல் ஸ்ரீ இசிபதனாராம விகாரையில் இடம்பெறவுள்ளது.

இந்நிகழ்வுக்கு தர்மசக்தி அமைப்பின் தலைவரும், அமரபுர மகா நிக்காயவின் மகாநாயக்க தேரர் மாதம்பாகம அஸ்ஸஜி திஸ்ஸ தேரர் தலைமை தாங்கவுள்ளார்.

பிரதம விருந்தினராக மேல்மாகாண ஆளுநர் ஹனீப் யூசுப், கெளரவ விருந்தினர்களாக புத்தசாசன, மத மற்றும் கலாச்சார அலுவல்கள் பிரதி அமைச்சர் கமகெதர திஸாநாயக்க, இளைஞர் விவகார பிரதி அமைச்சர் எரங்க குணசேகர கலந்துகொள்ளவுள்ளனர்.

மேலும் சிறப்பு அழைப்பாளராக முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் எம்.எஸ்.எம்.நவாஸ் அவர்களும் கலந்துகொள்ளவுள்ளார்.

Popular

More like this
Related

சுரேஷ் சலேயின் உடல் ஆரோக்கியம் மோசமடைந்து வருவதால் ஜனாதிபதிக்கு கடிதம்

அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலேயின் ஆரோக்கிய நிலைமை...

இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் ஏற்பாட்டில் நாளை புத்தளத்தில் இஸ்லாமிய மாநாடு!

இலங்கையில் பல தசாப்த காலங்களாகத் தொடர்ந்து இஸ்லாமியப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு...

நாட்டை சுற்றியுள்ள கடற்பரப்புகளுக்கு சிவப்பு எச்சரிக்கை !

காங்கேசன்துறையிலிருந்து மன்னார் ஊடாக கற்பிட்டி வரையான கடற்பரப்புகளுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் பலத்த...

தொழுநோய் ஒழிப்பிற்கான உலக சுகாதார அமைப்பின் தூதுவருடன் அமைச்சர் நலிந்த சந்திப்பு

தொழுநோய் ஒழிப்பிற்கான உலக சுகாதார அமைப்பின் (WHO) நல்லெண்ண தூதுவர் யோஹெய்...