தற்போது நிலவும் அதிக வெப்பமான வானிலை அடுத்த சில நாட்களுக்கும் தொடரும்

Date:

தற்போது நிலவும் வெப்பமான வானிலை அடுத்த சில நாட்களுக்கும் தொடரும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

வடக்கு, வடமத்திய, மேல், சப்ரகமுவ, தென் மற்றும் வடமேல் மாகாணங்களிலும், திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் இன்று (31) மனித உடலால் உணரப்படும் அளவிற்கு வெப்பநிலை 39 முதல் 45 டிகிரி செல்சியஸ் வரை நிலவக்கூடும் என திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இது குறித்து மேலும் விளக்கிய, வளிமண்டலவியல் திணைக்களத்தின் கடமை நேர வானிலை ஆய்வாளர் மலித் பெர்னாண்டோ, “இந்த நிலைமை அடுத்த சில நாட்களிலும் எதிர்பார்க்கப்படலாம்.”

இதற்கு பிரதான காரணம் பருவகால சூழ்நிலையாகும். இது வழக்கமாக ஒவ்வொரு ஆண்டும் மார்ச் அல்லது ஏப்ரல் மாதங்களில் எதிர்பார்க்கப்படுகிறது.

வெப்பநிலை மனித உடலால் உணரப்படும் அளவிற்கு இருக்கும், எனவே மக்கள், வெட்டவெளிகளில் வேலை செய்பவர்கள், போதியளவு திரவங்கள் மற்றும் நீரை அருந்த வேண்டும்.

முடிந்த போதெல்லாம், நிழலான இடத்தில் ஓய்வெடுக்கவும். நீங்கள் வெளிர் நிற ஆடைகளை அணியலாம். “நோயுற்றவர்கள் மற்றும் குழந்தைகள் தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட வேண்டும்.” என்றார்.

 

Popular

More like this
Related

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா (ACJU) – பஹன மீடியா குழுமத்திற்குமிடையே நடைபெற்ற சினேகபூர்வ சந்திப்பு!

கடந்த ஏழு ஆண்டுகளுக்கும் மேலாக "தூய இலங்கை" எனும் மகுடம் தாங்கி...

வாகன இறக்குமதி மூலம் 512.5 பில்லியன் ரூபாய் வரி வருமானம்!

2026 ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் 316,000 வாகனங்கள் இறக்குமதி...

சமச்சீரற்ற ஒத்திசைவு: இலங்கை தனது பன்முகத்தன்மையை ஒரு பலமாக மாற்ற முடியுமா?

-ரிசா யெஹியா சிரேஷ்ட பொறியியலாளர். இலங்கையில் மீண்டும் மீளும் சமூகத் தகராறுகள் உடனடி பிரச்சினையை...

ஜப்பான், மத்திய கிழக்கில் புதிய வேலைவாய்ப்புகள்!

தென் கொரியா மற்றும் இஸ்ரேலில் ஏற்கனவே வழங்கப்பட்டு வரும் வேலைவாய்ப்புகளுக்கு மேலாக,...