ஊழல் குற்றச்சாட்டின் பேரில் துருக்கியின் மிகப் பெரிய நகரான இஸ்தான்புல் நகர மேயரும் முக்கிய எதிர்க்கட்சித் தலைவருமான எக்ரீம் இமாமோக்லு பொலிஸாரால் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவரது கைதுக்கு எதிராக பல்கலைக்கழகங்கள் உள்ளிட்ட பல இடங்களில் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றுள்ளன.
ஊழல் வழக்கு தொடர்பில் இமாமோக்லுவின் நெருங்கிய உதவியாளா் உட்பட மேலும் 100 போ் கைது செய்யப்பட்டுள்ளதாக அரசுக்குச் சொந்தமான ‘அனடோலு’ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
2014 ஆண்டு முதல் துருக்கி ஜனாதிபதி ரசப் தயிப் அர்தூகான் செயல்பட்டு வருகிறார். நீதி மற்றும் வளர்ச்சி கட்சியை சேர்ந்த அர்தூகான் 1994 முதல் 1998 வரை இஸ்தான்புல் மேயராக செயல்பட்டுள்ளார். மேலும், 2003 முதல் 2014 வரை துருக்கி பிரதமராகவும் செயல்பட்டுள்ளார்.