தேசபந்து தென்னகோனுக்கு ஏப்ரல் 03 வரை விளக்கமறியல் நீடிப்பு;மாத்தறை நீதவான் நீதிமன்றம் உத்தரவு

Date:

பதவிலியிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ள முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனை ஏப்ரல் 03 ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்க மாத்தறை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

2023 ஆம் ஆண்டு வெலிகம பெலேன பகுதியில் உள்ள ஒரு ஹோட்டலுக்கு அருகில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக பிடியாணை பிறப்பிக்கப்பட்ட தேசபந்து தென்னக்கோன், தாம் கைது செய்யப்படுவதை சுமார் 20 நாட்கள் தவிர்த்து நேற்று (19) மனுவொன்றை சமர்ப்பித்து மாத்தறை நீதிமன்றத்தில் சரணடைந்தார்.

அவர் சரணடைந்ததைத் தொடர்ந்து, மாத்தறை நீதவான் அவரை இன்று (20) வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.

இந்த உத்தரவுக்கு இணங்க, தென்னகோன் நேற்று மாலை (19) விசேட பாதுகாப்பின் கீழ் அங்குனுகொலபெலஸ்ஸ சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டதாக சிறைச்சாலை வட்டாரங்கள் தெரிவித்தன.

Popular

More like this
Related

மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர் காரணமாக இலங்கை பொருளாதாரத்தில் ஏற்படக்கூடிய தாக்கம் குறித்து கலந்துரையாடல்

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தற்போதைய போர்ச் சூழல் காரணமாக இலங்கையின் பொருளாதாரத்தில்...

புத்தளம் ஆதார வைத்தியசாலை மத்திய அரசாங்கத்தின் கீழ்:

தற்போது வடமேல் மாகாண சபையின் கீழ் இயங்கி வரும் புத்தளம் ஆதார...

ஐக்கிய அரபு அமீரக ஜனாதிபதியுடன் ஜனாதிபதி அநுர பேச்சு!

ஐக்கிய அரபு அமீரகம் அண்மையில் எதிர்கொண்ட தாக்குதல்கள் குறித்துத் தனது கவலையைத்...

இலங்கை கடற்பரப்பில் ஈரானிய கப்பல் மீதான தாக்குதலில் 100-க்கும் மேற்பட்டோர் மாயம்: ரெய்ட்டர்ஸ் தகவல்

இலங்கை கடற்கரையில் ஈரானிய கப்பலின் மீது சந்தேகத்திற்கிடமான நீர்மூழ்கிக் கப்பல் நடத்திய...