தேசிய வெசாக் பண்டிகை இம்முறை நுவரெலியா மாவட்டத்தில் நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக புத்தசாசன, மத மற்றும் கலாச்சார விவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
தேசிய வெசாக் வாரம் மே மாதம் 10 ஆம் திகதி முதல் 16 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது.
பௌத்த ஞானம் ஏற்படும் வகையில், இந்த ஆண்டு அரச வெசாக் கொண்டாட்டம் அனைத்து இன மக்களின் பங்கேற்புடன் நடத்தப்பட வேண்டும் என்று புத்தசாசன அமைச்சு தெரிவித்துள்ளது
அதற்கமைய அரச வெசாக் பண்டிகை ஏற்பாடுகள் தொடர்பில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போபோதே இந்த ஆண்டுக்கான அரச வெசாக் தினக் கொண்டாட்டத்தை மே 12 ஆம் திகதி வெசாக் பௌர்ணமி தினத்தன்று நுவரெலியாவில் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.