நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க, இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் கைது!

Date:

புதிய ஜனநாயக முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க  கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த கைது நடவடிக்கை இன்றைய தினம் (27) இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க இன்று (27) இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டிருந்தார்.

அதன்படி, விசாரணைகளை தொடர்ந்து கைது செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க ஊவா மாகாண முதலமைச்சராக அவர் பதவி வகித்த காலத்தில் ஏற்பட்ட ஒரு முறைகேடு தொடர்பாக இந்த கைது நடவடிக்கை இடம்பெற்றுளளதாக தெரியவந்துள்ளது.

Popular

More like this
Related

இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் ஏற்பாட்டில் நாளை புத்தளத்தில் இஸ்லாமிய மாநாடு!

இலங்கையில் பல தசாப்த காலங்களாகத் தொடர்ந்து இஸ்லாமியப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு...

நாட்டை சுற்றியுள்ள கடற்பரப்புகளுக்கு சிவப்பு எச்சரிக்கை !

காங்கேசன்துறையிலிருந்து மன்னார் ஊடாக கற்பிட்டி வரையான கடற்பரப்புகளுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் பலத்த...

தொழுநோய் ஒழிப்பிற்கான உலக சுகாதார அமைப்பின் தூதுவருடன் அமைச்சர் நலிந்த சந்திப்பு

தொழுநோய் ஒழிப்பிற்கான உலக சுகாதார அமைப்பின் (WHO) நல்லெண்ண தூதுவர் யோஹெய்...

நடு வானில் மின்னல் தாக்கத்துக்கு உள்ளான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம்!

அவுஸ்திரேலியாவின் சிட்னி நோக்கிச் சென்று கொண்டிருந்த ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் ஒன்று...