நோன்பு துறக்கும் நேரத்தில் மாற்றம்..!

Date:

கொழும்பு மற்றும் கொழும்பை அண்டியுள்ள பகுதிகளில் உள்ளவர்கள் மஃரிப் தொழுகையின் அதானை கலண்டரில் உள்ள நேர சூசியில் குறிப்பிடப்பட்டுள்ள நேரத்தில் ஒரு நிமிடத்தைக் கூட்டி அதான் சொல்லி நோன்பு திறக்குமாறு அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா வேண்டுகோள் விடுத்துள்ளது.

புவியியல் மாற்றங்கள், பாதைகள் விஸ்தரிப்பு, மற்றும் உயர் மாடிக்கட்டடங்கள் அதிகரிப்பு போன்ற காரணங்களால் சில நாட்களில் மஃரிப் தொழுகையின் அதான் சொல்லப்படும் நேரத்தில் சூரியன் தென்படுவதை அவதானிக்க முடிவதாகவும் இதனால் இந்த விடயத்தை மக்களுக்கு அறிவூட்டுவதற்காக அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவும் ஹஸனிய்யா அரபுக் கல்லூரியும் இணைந்து பல முயற்சிகளை மேற்கொண்டதாகவும் ஜம்இய்யா அறிவித்துள்ளது.

இலங்கையில் சூரிய உதயம் அஸ்தமனம் மற்றும் தொழுகை நேரங்கள் முன்னைய ஆலிம்களால் உருவாக்கப்பட்டு பின்னர் அல் ஆலிம் அப்துல் சமத் ரஹிமஹுல்லாஹ் அவர்களால் அறிமுகப்படுத்தப்பட்ட தொழுகை நேர அட்டவனையே தற்போது வரை அமுலில் இருந்து வருகிறது.

இந்த அட்டவனையை இற்றைப்படுத்துவதற்காக கடந்த மாதம் ஹஸனிய்யா அரபுக்கல்லூரியும் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவும் இணைந்து விரிவான கலந்துரையாடல்களை ஏற்பாடு செய்திருந்தது.

இந்த கலந்துரையாடலில் பல தீர்மானங்கள் எடுக்கப்பட்டு அவை இறுதிக்கட்டத்தில் உள்ள நிலையில் ரமழான் மாதம் அண்மித்திருப்பதால் நோன்பு திறக்கும் நேரத்தில் ஏற்பட்டுள்ள மாற்றத்தை உடனடியாக அமுல்படுத்துமாறு தற்போது வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

அமெரிக்காவின் நியூயார்க் நகர மேயராக முதல் முஸ்லிம் ஸோரான் மம்தானி தேர்வு.

அமெரிக்காவின் நியூயார்க் நகர மேயராக ஸோரான் மம்தானி (34) தேர்வு செய்யப்பட்டுள்ளார். அமெரிக்காவின்...

வத்திக்கான் வெளிவிவகார அமைச்சர் உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுக்குள்ளான தேவாலயங்களுக்கு விஜயம்

இலங்கைக்கு உத்தியோக பூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள வத்திக்கான் வெளிவிவகார அமைச்சர் பேராயர்...

ஐக்கிய அரபு இராச்சியத்தின் இராஜாங்க அமைச்சர்- விஜித ஹேரத் சந்திப்பு: பொருளாதார வாய்ப்புகள் குறித்து கவனம்!

ஐக்கிய அரபு எமிரேட்ஸின் வெளியுறவுத்துறை இணையமைச்சர் சயீத் பின் முபாரக் அல்...

நாட்டின் சில பகுதிகளில் மட்டும் பிற்பகல் வேளையில் மழை பெய்யக்கூடும்.

வடக்கு மற்றும் ஊவா மாகாணங்களின் சில இடங்களிலும் அத்துடன் திருகோணமலை மாவட்டத்தின்...