பட்டலந்த ஆணைக்குழுவின் அறிக்கையை சபை முதல்வர் பிமல் ரத்நாயக்கசற்று முன்னர் நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்தார்.
பட்டலந்த விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கைகள் தொடர்பில் நடவடிக்கை எடுப்பதற்கு ஜனாதிபதி அனுரகுமாரதிசநாயக்கவும் அமைச்சரவையும் கொள்கை தீர்மானமொன்றை எடுத்துள்ளதாக அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
இந்த ஆணைக்குழுவின் அறிக்கை குறித்து ஆராய்வதற்கு விசேட குழுவொன்றை நியமிப்பது எனவும் சட்டமா அதிபரின் ஆலோசனையை பெறுவது எனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
பட்லந்த ஆணைக்குழு அறிக்கையை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கு கடந்த திங்கட்கிழமை (10) அமைச்சரவை தீர்மானம் எடுத்திருந்தது.
இந்த நிலையில் பட்டலந்த ஆணைக்குழு அறிக்கையை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்குமாறும் அதன் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துமாறும் பல்வேறு தரப்பினரும் அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.