ருஹுனு பல்கலைக்கழக முஸ்லிம் மஜ்லிஸ் ஏற்பாட்டில் நடக்கும் ‘இப்தார் அல் வஹ்தா’ நிகழ்வு இன்று (25) பிற்பகல் 4 மணி முதல் ருஹுனு பல்கலைக்கழக உள்ளக அரங்கில் நடைபெறவுள்ளது.
நிகழ்வில் பிரதம அதிதியாக பல்கலைக்கழக உபவேந்தர் சிரேஷ்ட பேராசிரியர் பி.ஏ.ஜயந்த கலந்துகொள்ளவுள்ளார்.
முஸ்லிம் மஜ்லிஸின் தலைவர் அல்தாப் ஹம்ஸா தலைமையில் நடைபெறும் இந்நிகழ்வில் மௌலவி எம்.இக்ராம் அல்பாஸி அவர்களும் அஷ்ஷெய்க் உமைர் தன்வீரி அவர்களும் விசேட உரை நிகழ்த்தவுள்ளார்.
முஸ்லிம் மஜ்லிஸின் பொருளாளர் சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி என்.ஏ.டி. ஜயசிங்க அவர்களின் வழிகாட்டலில் கடந்த வருடம் முதல் நடைபெற்று வரும் இந்த இப்தார் நிகழ்வு இந்த வருடமும் பஹன மீடியாவின் ஒத்துழைப்புடன் நடைபெறுகிறது.
இம்முறை இப்தாருக்கு முஸ்லிம் எய்ட், SFRD, அல் இக்மா சமூக சேவை நிறுவனம், பஹன மீடியா நிறுவனங்களும் மற்றும் பல தனவந்தர்களும் நிதி அனுசரணை வழங்கியிருந்தனர்.
பல்கலைக்கழக சமூகத்தில் அனைத்து இன மாணவர்களையும் ஒன்றிணைக்கும் வகையில் இந்த ‘இப்தார் அல் வஹ்தா’ நிகழ்வு இரண்டாவது முறையாக நடைபெறுகிறது.