பாகிஸ்தானின் தேசிய தினத்தை குறிக்கும் நிகழ்வு 23ஆம் திகதி கொழும்பில் உள்ள பாகிஸ்தான் உயர் ஸ்தானிகராலயத்தில் நடைபெற்றது.
பாகிஸ்தானின் உயர் ஸ்தானிகர் மேஜர் ஜெனரல் (ஓய்வு நிலை) ஃபஹீம்-உல்- அஸீஸ் அவர்கள் பாகிஸ்தானின் தேசிய கீதத்துடன் பாகிஸ்தான் தேசிய கொடியை உயர்த்தி விழாவை ஆரம்பித்தார்.
இந்நிகழ்வில் இலங்கையைச் சார்ந்த பாகிஸ்தான் சமூகத்தினர் கணிசமானோர் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வில், பாகிஸ்தான் ஜனாதிபதி மற்றும் பிரதமரின் பாகிஸ்தானின் தேசிய தினத்தை குறிக்கும் விசேட செய்திகளும் வாசிக்கப்பட்டன.
மேலும், கொழும்பிலுள்ள பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராலயம் 24 மார்ச் 2025 அன்று சினமன் கிராண்ட் ஹோட்டலில் பாகிஸ்தான் தேசிய தின வரவேற்பு நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தது.
இதில் இலங்கை அரசியல் தலைமைகள், இராஜதந்திர அதிகாரிகள், மூத்த பாதுகாப்பு அதிகாரிகள், அரசாங்கப் பிரதிநிதிகள், பிரபல வர்த்தகப் பிரமுகர்கள், மற்றும் பாகிஸ்தானிய ஆதரவாளர்கள் என பெருமளவிலான பங்கேற்பாளர்கள் கலந்துகொண்டனர்.
இதன் போது கருத்துதெரிவித்த பாகிஸ்தானின் உயர் ஸ்தானிகர் மேஜர் ஜெனரல் (ஓய்வு நிலை) பஹீம் உல் அஸீஸ் அவர்கள்,
பாகிஸ்தானும் இலங்கையும் பரஸ்பர மரியாதை மற்றும் நம்பிக்கையின் அடிப்படையில் நெருங்கிய உறவுகளை தொடர்ந்து பேணி வருகின்றன.
வர்த்தகம், பாதுகாப்பு, விஞ்ஞானம், கலாசாரம் மற்றும் கல்வி போன்ற பல துறைகளில் பாகிஸ்தான் – இலங்கை உறவு அடங்கியுள்ளது என்று குறிப்பிட்ட அவர், இலங்கை அரசாங்கத்திற்கும் மக்களுக்கும் பாகிஸ்தான் அரசாங்கம் மற்றும் மக்கள் சார்பாக வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.
இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாகக் இலங்கை தொழில் அமைச்சர் அனில் ஜயந்த பெர்னாண்டோ கலந்துகொண்டார்.