பாவங்கள் மன்னிக்கப்படும் ரமழானின் வருகையையிட்டு உங்களுக்கு எனது வாழ்த்துக்கள் – சவூதி தூதுவர்

Date:

அருளும், கருணையும், மன்னிப்பும் நிறைந்த ரமழான் மாதத்தின் வருகையை முன்னிட்டு, இலங்கைக்கான சவூதி அரேபியத் தூதுவர் காலித் ஹமூத் அல்-கஹ்தானி இலங்கை மக்களுக்கு தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

அவரது வாழ்த்துச் செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

இந்த புனித மாதத்தில், நற்செயல்கள் பரவிப் பெருகுகின்றன பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன, இந்த மாதத்தில் இறைவனின் புனித அல்-குர்ஆன் இறக்கியருளப்பட்டதன் மாபெரும் மகிழ்ச்சி நினைவுகூரப்படுகிறது. ஆயிரம் மாதங்களை விடச் சிறந்த ஓர் இரவு அதில் உள்ளது. ரமழானில் போட்டி போட்டுக் கொண்டு நற்செயல்கள் செய்யுமாறு ஆர்வமூட்டுகின்ற தலைசிறந்த போதனைகள் உள்ளன.

இந்த ஆசீர்வதிக்கப்பட்ட மாதத்தில், அனைவருக்கும் இறைகருணையும், நிம்மதியும், பாதுகாப்பும் கிடைக்க வேண்டுமெனப் பிரார்த்திக்கிறேன். எதிர்வரும் காலங்களிலும் மீண்டும் மீண்டும் இந்த ரமழான் என்ற பாக்கியம் எம் அனைவருக்கும் கிட்ட வேண்டுமென்றும், அது சுமந்து வரும் நன்மைகளையும் அருள்களையும் அடைந்துகொள்ள வேண்டும் என்றும் இறைஞ்சுகிறேன்.

மேலும், இந்த ரமழானில் நோன்பு பிடித்து, நின்று வணங்கி, நல்லமல்கள் செய்யும் பாக்கியத்தை எம் அனைவருக்கும் தருமாறும் வேண்டுகிறேன். மேலும், அல்லாஹ் அவற்றை ஏற்று அங்கீகரிப்பானாக!

Popular

More like this
Related

காஸாவில் போர் நிறுத்தம்: குனூத் அந் நாஸிலாவை நிறுத்திக் கொள்ளுமாறு ஜம்மியத்துல் உலமா வேண்டுகோள்

காஸாவில் போர் நிறுத்தம் தொடர்பாக இதுவரை ஒதப்பட்டு வந்த இன்று முதல்...

இரண்டு ஆண்டுகள் முடக்கத்தில் இருந்த பள்ளிவாசல்: சுத்தம் செய்யத் தொடங்கிய காசா மக்கள்

 யுத்த நிறுத்தத்தை தொடர்ந்து நிலைமைகள் சீராகத் தொடங்கியுள்ள நிலையில் மஸ்ஜித் ஸுஹதா...

முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவை சந்தித்தார் ஞானசார தேரர்

பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் உள்ளிட்ட...

நாட்டில் எலிக்காய்ச்சல் பரவுவதற்கு அதிக வாய்ப்புள்ள 12 மாவட்டங்கள் அடையாளம்

நாட்டில் எலிக்காய்ச்சல் பரவுவதற்கு அதிக வாய்ப்புள்ள 12 மாவட்டங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக,...