புகழ்பெற்ற இஸ்லாமிய அறிஞர் அபூ இஸ்ஹாக் அல்-ஹுவைனி கத்தாரில் மறைந்தார்!

Date:

எகிப்து நாட்டை பிறப்பிடமாகக் கொண்ட பிரபல ஹதீஸ் துறை அறிஞர் பன்னூலாசிரியர் ஹதீஸ் துறை ஆய்வாளர் மற்றும் பல்வேறு இஸ்லாமிய அறிவுப் பணியை மேற்கொண்டுவந்த சன்மார்க்க அறிஞர் அபூ இஸ்ஹாக் அல்-ஹுவைனி நேற்று கத்தாரில் காலமானார்.

இஜாஸி முஹம்மத் யூசுப் சரீப் என்ற இயற்பெயரைக் கொண்ட அபபஇஸ்ஹாக் அல்-ஹுவைனி அவர்கள் 1956ஆம் ஆண்டு எகிப்தில் பிறந்தவர்.

இவரது எழுத்துக்களும் பேச்சுக்களும் உலகின் பல பாகங்களிலும் மிகவும் செல்வாக்கு பெற்றவைகளாக கருதப்படுகின்றன. தொலைக்காட்சி ஊடாகவும் ஆழமான உரைகள் ஊடாகவும் மக்களுடைய உள்ளங்களை கவர்ந்த இவர் கடந்த நூற்றாண்டில் இறுதியில் வாழ்ந்த அஷ்ஷெய்க் நாஸிருத்தீன் அல்பானி அவர்களுடைய சிந்தனை செல்வாக்கினால் தாக்கம் பெற்ற மிக முக்கியமான அறிஞராக கருதப்படுகின்றார்.

சவூதி அரேபிய அறிஞர்களான சாலிஹ் ஆல் சைக், இப்னு உஸைமீன் உள்ளிட்ட பிரபலமான அறிஞர்களின் தொடர்பை பேணி வந்த இவர் செய்மதி தொலைக்காட்சி ஊடகங்கள் பிரபலமாகிய காலத்தில் அரபுலகில் பிரபலமான அல்ரஹ்மா அல்நதா போன்ற இஸ்லாமிய தொலைக்காட்சி ஊடகங்களின் ஊடாகவும் மிகப் பிரபலமான நிகழ்ச்சிகளை நடாத்தி வந்ததும் குறிப்பிடத்தக்கது.

நடுநிலை சலபிச் சிந்தனை போக்குடைய இவரது சிந்தனைகளும் கருத்துக்களும் விளக்கங்களும் இஸ்லாமிய உலகில் மிகப்பெரிய செல்வாக்கு பெற்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

“சுன்னாவை அலட்சியம் செய்வது மிக நீண்ட மனித வரலாற்றில் மிகச்செல்வாக்கு பெற்ற ஒரு மாமனிதரான முஹம்மத் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களை அலட்சியம் செய்வதாகும். ஏனெனில் இஸ்லாத்தின் முக்கியமான பகுதியாக “இஸ்னாத் “என்ற துறை கருதப்படுகின்றது. அது இல்லை என்றால் எதுவுமே இல்லை.”

இவ்வாறு சுன்னாவின் முக்கியத்துவத்தைப் பற்றிக் கூறும் போது மறைந்த அறிஞர் அபூ இஸ்ஹாக் அல்-ஹுவைனி தெரிவித்ததாக மர்ஹூம் கலாநிதி முஹம்மத் இமாரா தன்னுடைய ஒரு நூலில் குறிப்பிட்டுள்ளார்.

சுன்னா என்ற சாம்ராஜ்ஜியத்தின் தலைமை ஸ்தானத்தில் வைத்து நோக்கப்பட வேண்டியவர் தான் அபூ இஸ்ஹாக் அல்-ஹுவைனி என்றும் அல்லாமா அபூ இஸ்ஹாக் அல்-ஹுவைனி அவர்கள் சுன்னாவுக்கு ஆற்றிய பங்கு குறித்து குறிப்பிடும் போது அவர் தெரிவித்திருந்தமையும் நினைவு கூறத்தக்கது.

கலாநிதி யூசுப் கர்ளாவி உயிர் வாழும் காலத்தில் அல்லாமா அபூ இஸ்ஹாக் நோய் காரணமாக மருத்துவமனையி்ல் இருந்த போது, கர்ளாவி அவர்கள் இவரை நலம் விசாரிக்கச் சென்றார்.

இது விமர்சனமாக மாறிய போது “கெளரவமான ஒரு மனிதர் கெளரவமான மற்றொரு மனிதரை நலம் விசாரித்துச் சென்றார்” என்று செய்க் அபூ இஸ்ஹாக் அவர்களின் மகன் ஊடகங்களுக்கு பதில் வழங்கி சர்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தமை ஒரு முக்கிய நிகழ்வாகும்.

Popular

More like this
Related

நவம்பர் 3 முதல் 10 காதி சபைகளுக்கான புதிய நியமனங்கள்: புத்தளம் காதி நீதிபதியாக என்.அஸ்மீர் நியமனம்.

நீண்ட நாட்களாக வெற்றிடமாகக் காணப்பட்ட 10 காதி சபைகளுக்கான நியமனங்களை நவம்பர்...

தேசிய அடையாள அட்டைகள் தடையின்றி வழங்கப்படும்.

தேசிய அடையாள அட்டைகளை தடையின்றி தொடர்ந்து வழங்க முடியுமென ஆட்பதிவுத் திணைக்களம்...

க.பொ.த உயர்தரப்பரீட்சை: அனுமதி அட்டைகள் கிடைக்காதோருக்கு அறிவிப்பு

க.பொ.த உயர்தரப் பரீட்சை  இம்மாதம் 10 ஆம் திகதி ஆரம்பமாகி  எதிர்வரும் ...

2025 இல் இலங்கை இறக்குமதி செய்துள்ள வாகனங்களின் விபரம்!

இந்த ஆண்டு இதுவரை இலங்கை 220,000 க்கும் மேற்பட்ட வாகனங்களை இறக்குமதி...