மேர்வின் சில்வாவுக்கு ஏப்ரல் 3 வரை மீண்டும் விளக்கமறியல்..!

Date:

முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வாவை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு மஹர நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கிரிபத்கொட பகுதியில் அரசாங்கத்திற்குச் சொந்தமான காணியை போலி ஆவணங்களைத் தயாரித்து விற்பனை செய்த சம்பவம் தொடர்பாக, பெலவத்தை, பத்தரமுல்லை பகுதியில் வைத்து மேர்வின் சில்வா குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் அதிகாரிகளால் அண்மையில் கைது செய்யப்பட்டார்.

முன்னாள் அமைச்சரைத் தவிர, மேலும் இரண்டு பேர் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டனர்.
அதன்படி, முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா உள்ளிட்ட 3 சந்தேகநபர்களும் இன்று மஹர நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட போது அவர்களை ஏப்ரல் 3ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டது.

Popular

More like this
Related

திரைப்பட கூட்டுத்தாபனத்தை மாற்றியமைக்க திட்டம்: அமைச்சரவை அனுமதி

இலங்கை திரைப்படக் கூட்டுத்தாபனத்தின் சட்டத்தை நீக்கி புதிய சட்டத்தை அறிமுகப்படுத்த அமைச்சரவை...

இலங்கையில் முதன்முறையாக உலக கெரடோகோனஸ்  தினம் அனுஷ்டிப்பு.

உலக கெரடோகோனஸ் தினம் (World Keratoconus Day ) ஒவ்வொரு ஆண்டும்...

இலங்கை மேசைப் பந்து விளையாட்டு வரலாற்றில் தாவி சமரவீர புதிய மைல்கல்

11 வயதிற்குட்பட்ட உலக மேசைப் பந்து தரவரிசையில் இலங்கையைச் சேர்ந்த தாவி...

டெல்லி கார் குண்டு வெடிப்பு: 13 பேர் கொல்லப்பட்டதையடுத்து பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் அமுலில்.

டெல்லியின் வரலாற்றுச் சிறப்புமிக்க செங்கோட்டைப் பகுதிக்கு அருகே இன்று நடந்த சக்திவாய்ந்த...