களனி பகுதியில் காணி ஒன்று தொடர்பில் போலியான ஆவணங்களை தயாரித்து பண மோசடி செய்த குற்றச்சாட்டில் மேலும் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த மோசடி தொடர்பில் முன்னாள் அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மேர்வின் டி சில்வா நேற்று (05) இரவு பத்தரமுல்ல பெலவத்தையில் உள்ள அவரது வீட்டில் வைத்து கைது செய்யப்பட்டார்.
இச்சம்பவம் தொடர்பில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவு மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில், போலி ஆவணங்களைத் தயாரித்து 75 மில்லியன் ரூபா பணத்தை மோசடி செய்த குற்றச்சாட்டு சம்பவம் தொடர்பில் 06 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.