யாழ் பல்கலையில் தமிழ் மொழியில் பட்டம் பெற்ற பௌத்த தேரர்!

Date:

யாழ். பல்கலைக்கழகத்தில்  தமிழில் பட்டப்பின் டிப்ளோமாவைப் பயின்று பௌத்த தேரர் ஒருவர் பட்டம் பெற்றுள்ளார்.

யாழ். பல்கலைக்கழகத்தில் நேற்று (21) 39 ஆவது பட்டமளிப்பு விழாவின் மூன்றாம் நாள் நிகழ்வுகள் இடம்பெற்றன.

இதில் முதலாவது அமர்வின் போது சன்னாஸ்கம இந்திரானந்த தேரர் என்ற  பௌத்த தேரரே இந்த பட்டம் பெற்றுள்ளார்.

உயர்பட்டப்படிப்புகள் பீடத்தினால் நடாத்தப்பட்ட தமிழில் பட்டப்பின் தகைமைக் கற்கை நெறியைப் பூர்த்தி செய்து அவர் இந்த பட்டம் பெற்றுள்ளார்.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் சி.சிறிசற்குணராஜாவினால் சம்பிரதாய பூர்வமாக இவரது பட்டம் கையளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

 

Popular

More like this
Related

களுத்துறையில் சில பகுதிகளுக்கு 12 மணிநேர நீர்வெட்டு

களுத்துறை மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு நாளை (05) 12 மணிநேர நீர்வெட்டு...

மட்டக்களப்பில் நடைபெற்ற முஸ்லிம் காங்கிரஸ் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கான வதிவிட செயலமர்வு!

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கான வதிவிட செயலமர்வு மட்டக்களப்பு,...

சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் அறிக்கைகளை சமர்ப்பிக்காத அதிகாரிகளுக்கு எதிராக வழக்குத் தாக்கல்!

2025 ஆம் ஆண்டுக்கான சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் தொடர்பான அறிக்கையினை சமர்ப்பிக்காத...