கொழும்பு வாழைத்தோட்டம் அல்-மஸ்ஜிதுல் முனீர் மஅல் மத்ரஸாவில், புனித நோன்பு காலத்தில் இரவு வேளையில் புனித அல்-குர்ஆனை முழுமையாக ஓதி முடித்த மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு கடந்த 28ஆம் திகதி இடம்பெற்றது.
இந்த நிகழ்வு மத்ரஸாவின் தலைவர் அல்-ஹாஜ் ஜஹாங்கிர் அலியின் தலைமையில் நடைபெற்றது.
நிகழ்வின் ஆரம்ப உரையை மத்ரஸாவின் ஆலோசகர் மௌலவி சிஹாப்தீன் நிகழ்த்தினார், அதேவேளை விசேட உரையை மத்ரஸாவின் அதிபர் ரயிசுத்தீன் வழங்கினார். தலைவர் ஜஹாங்கிர் அலி தலைமையுரையினை நிகழ்த்தியதுடன், நன்றியுரையை இல்யாஸ் ஹாஜி வழங்கினார்.
இந்த சிறப்புமிக்க நிகழ்வில் மத்ரஸாவின் நிர்வாக சபை உறுப்பினர்கள், முன்னாள் தலைவர்கள், உறுப்பினர்கள், பெற்றோர்கள், மாணவர்கள், மற்றும் நலன் விரும்பிகள் கலந்துகொண்டனர்.
நிகழ்வின் ஒரு பகுதியாக மாணவர்கள் ஹஸீதா, மூன்று மொழிகளிலும் இஸ்லாமிய பேச்சுக்கள், இஸ்லாமிய கீதங்களை வழங்கினர். இதன் பின்னர் குர்ஆன் ஓதலில் ஈடுபட்ட அனைத்து மாணவ, மாணவிகளுக்கும் நினைவுப்பரிசுகள் வழங்கப்பட்டன.
தகவல்- ஏ.எஸ்.எம். ஜாவித்