“ராபீதா நளீமிய்யீன்” சமூக வகிபாகம் குறித்த கலந்துரையாடலும் இப்தாரும்!

Date:

ஜாமியா நளீமியாவின் பழைய மாணவர் அமைப்பான ராபீதா அன் நளீமிய்யீன் புத்தளம் மாவட்ட கிளையின் வருடாந்த ஒன்று கூடலும் இப்தார் நிகழ்வும் கடந்த 16 ஆம் திகதி புத்தளம் இஸ்லாஹிய்யா மகளிர் கல்லூரி பிரதான மண்டபத்தில் நடைபெற்றது.

இவ்வமைப்பின் புத்தளம் பிரதேச தலைவர் ஓய்வு பெற்ற கல்விப் பணிப்பாளர், இஸட் ஏ.எம். சன்ஹீர் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், இம்மாவட்டத்தைச் சேர்ந்த ஜாமியா நளீமியாவின் பழைய மாணவர்கள் உட்பட பிரதேசத்தின் சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகளும் உலமாக்களும் கலந்துகொண்டனர்.

இந்நிகழ்வின் பிரதான உரையை பஹன மீடியா பிரைவெட் லிமிட்டெட்டின் பணிப்பாளரும் புத்தளம் மாவட்ட சர்வமத அமைப்பின் நிறைவேற்றுக்குழு உறுப்பினருமான அஷ்ஷெய்க், எம்.எஸ்.அப்துல் முஜீப் (கபூரி )”‘ராபிதா நளீமிய்யீனிடம் சமூகம் எதிர்பார்ப்பது என்ன?”‘ என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்.

இன்றைய சமூகச் சூழலில் ராபிதா நளீமிய்யீன் என்ற அமைப்பு இஸ்லாமிய பின்புலம் கொண்ட ஒரு புத்திஜிவிகளின் அமைப்பு என்ற வகையில் அதனிடம் சமூகம் எதிர்பார்க்கின்ற விடயங்கள் என்ன? என்பது பற்றிய குறிப்புக்களை அஷ்ஷெய்க் அப்துல் முஜீப் தனது உரையில் குறிப்பிட்டார்.

நிகழ்ச்சியின் இறுதியில் இப்தார் விருந்து ஏற்பாடு செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து மஹ்ரிப் தொழுகையுடன் நிகழ்வு நிறைவுபெற்றது.

இந்நிகழ்வில் ஓய்வு நிலை கல்விப் பணிப்பாளர், இஸட்.ஏ.எம் சன்ஹீர், சட்டத்தரணி எம்.எச்.பஸ்லுல் ரஹ்மான் நளீமி,மேர்சி கல்வி வளாகத்தின் பணிப்பாளர், அஷ்ஷெய்க். எம். முனாஸ் (நளீமி)ஆகியோரும் கருத்துரைகள் வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

சுரேஷ் சலேயின் உடல் ஆரோக்கியம் மோசமடைந்து வருவதால் ஜனாதிபதிக்கு கடிதம்

அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலேயின் ஆரோக்கிய நிலைமை...

இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் ஏற்பாட்டில் நாளை புத்தளத்தில் இஸ்லாமிய மாநாடு!

இலங்கையில் பல தசாப்த காலங்களாகத் தொடர்ந்து இஸ்லாமியப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு...

நாட்டை சுற்றியுள்ள கடற்பரப்புகளுக்கு சிவப்பு எச்சரிக்கை !

காங்கேசன்துறையிலிருந்து மன்னார் ஊடாக கற்பிட்டி வரையான கடற்பரப்புகளுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் பலத்த...

தொழுநோய் ஒழிப்பிற்கான உலக சுகாதார அமைப்பின் தூதுவருடன் அமைச்சர் நலிந்த சந்திப்பு

தொழுநோய் ஒழிப்பிற்கான உலக சுகாதார அமைப்பின் (WHO) நல்லெண்ண தூதுவர் யோஹெய்...