ரிட் மனு தாக்கல் செய்த தேசபந்து தென்னக்கோன்

Date:

முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் சட்டத்தரணிகள் ஊடாக மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் ரிட் மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார்.

கடந்த 2023 ஆம் ஆண்டு மாத்தறை வெலிகம டபிள்யூ. 15 ஆவது விருந்தகத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பாக தன்னை கைது செய்ய மாத்தறை நீதவான் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை இடைநிறுத்தி இடைக்காலத் தடை உத்தரவை பிறப்பிக்குமாறு அந்த மனுவில் அவர் கோரியுள்ளார்.

இந்த மனு மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் பதில் தலைவர் மொஹமட் லாபர் தாஹிர் மற்றும் சரத் திசாநாயக்க ஆகியோர் அடங்கிய மேன்முறையீட்டு நீதிமன்ற ஆயம் முன்னிலையில் இன்று (10) பரிசீலனைக்கு அழைக்கப்பட்டது.

பிரதிவாதிகளுக்கு அழைப்பாணை விடுத்த பின்னர், மனுவை எதிர்வரும் 12 ஆம் திகதி பரிசீலனைக்கு அழைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

 

 

 

 

Popular

More like this
Related

கதிர்காம பகுதியில் கட்டப்பட்டுள்ள கட்டிடம் தனக்கு சொந்தமானது அல்ல: சமூக ஊடகங்களில் பரவி வரும் கருத்துக்கள் தவறானதாகும் – கோட்டாபய

கதிர்காமத்தில் மாணிக்க கங்கைக்கு அருகில் கட்டப்பட்டுள்ள கட்டிடம் தனக்கு சொந்தமானது அல்ல...

இஷாரா செவ்வந்தி நாட்டை விட்டு தப்பிய விதத்தை வெளிப்படுத்தி பொலிஸார்

கணேமுல்ல சஞ்சீவ கொலை குற்றச்சாட்டில் நேபாளத்தில் கைது செய்யப்பட்ட இஷாரா செவ்வந்தி...

2 ஆண்டு போர் முடிவுக்கு வந்தது: டிரம்ப் தலைமையில் இஸ்ரேல் – ஹமாஸ் அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது: அடுத்து என்ன?

இஸ்ரேல் - காசா போர் தற்போது முடிவுக்கு வந்துள்ளது. நேற்று எகிப்தில்...