ரூ.65 கோடியில் தமிழ்நாடு ஹஜ் இல்லம்: புனித ‘ஜம் ஜம்’ நீர் குடுவையை பரிசளித்தார் மஜக தலைவர்

Date:

சென்னை நங்கநல்லூரில் 65 கோடி ரூபாய் மதிப்பில் புதிய ஹஜ் இல்லம் கட்டும் முதலமைச்சரின் அறிவிப்புக்கு நன்றி தெரிவிக்கும் வகையில், புனித மக்காவில் இருந்து தருவிக்கப்பட்ட ‘புனித ஜம்ஜம் தண்ணீர்’ குடுவையை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு மனித நேய ஜனநாயகக் கட்சித் தலைவர் தமிமுன் அன்சாரி அவர்கள் பரிசளித்தார்.

தமிழ்நாடு முதலமைச்சர் மாண்புமிகு தளபதி மு.க.ஸ்டாலின் அவர்களை இன்று அறிவாலயத்தில் மனிதநேய ஜனநாயக கட்சி தலைவர் மு.தமிமுன் அன்சாரி அவர்கள் சந்தித்தார்.

சென்னை நங்கநல்லூரில் 65 கோடி ரூபாய் மதிப்பில் ஹஜ் பயணம் மேற்கொள்ளும் ஹாஜிகளின் பயன்பாட்டிற்காக புதிய ஹஜ் இல்லம் கட்டும் முதலமைச்சரின் அறிவிப்புக்கு நேரில் சென்று நன்றி கூறினார்.

இதற்கு நன்றி தெரிவிக்கும் வகையில், புனித மெக்காவில் இருந்து தருவிக்கப்பட்ட ‘புனித ஜம் ஜம் தண்ணீர் குடுவையை’ பரிசளித்தார்.

சென்னை விமான நிலையம் அருகே நங்கநல்லூரில் தமிழ்நாடு ஹஜ் இல்லம் அமைக்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

நாகை மாவட்டத்தில் புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி முதல்வர் உரையாற்றும் போதே இந்த விடயத்தை தெரிவித்தார்

இவ்விழாவில் நாகை மாவட்டத்துக்கான 6 புதிய அறிவிப்புகளை அறிவித்தார். அதில் ஆறாவது அறிவிப்பாக, நங்கநல்லூரில் தமிழ்நாடு ஹஜ் இல்லம் அமைக்கப்படும் என்று தெரிவித்தார்.

“உலகம் முழுவதும் இருந்து வரக்கூடிய இஸ்லாமியர்கள் மட்டுமில்லாமல், பல மதங்களைச் சேர்ந்த மக்களும் வருகை தருகின்ற நாகூர் தர்கா, இந்த நாகை மாவட்டத்தில்தான் இருக்கிறது. இங்கே இருந்து இஸ்லாமிய மக்களுக்கு மகிழ்ச்சி தரக் கூடிய ஒரு செய்தியை ஆறாவது அறிவிப்பாக வெளியிடுவது பொருத்தமாக இருக்கும் என்று நினைக்கிறேன். ஹஜ் புனிதப் பயணம் மேற்கொள்ளும் இஸ்லாமியர்களுக்காக – சென்னை விமான நிலையம் அருகில், நங்கநல்லூரில், 65 கோடி ரூபாய் மதிப்பீட்டில், தமிழ்நாடு ஹஜ் இல்லம் கட்டப்படும்  என்றார்.

ஹஜ் இல்லம் முஸ்லிம்களின் வெகு நாள் கோரிக்கை. ஹஜ் பயணத்திற்கு செல்வோரை அங்கு தங்க வைத்து, விமானத்தில் ஏற்றி அனுப்ப வசதியாக இருக்கும்.

Popular

More like this
Related

இடைவிடாது தாக்குதல்கள்: காசா நகர மையப் பகுதியை நோக்கி முன்னேறும் இஸ்ரேலிய டாங்கிகள்

இஸ்ரேலிய டாங்கிகள் காசா நகர மையப் பகுதியை நோக்கி முன்னேற ஆரம்பித்திருப்பதோடு...

வெற்றி சோகமாக மாறிய தருணம்: கிரிக்கெட் வீரர் துனித் வெல்லாலகேயின் தந்தை காலமானார்

இலங்கை தேசிய கிரிக்கெட் அணி வீரர் துனித் வெல்லலகேயின் தந்தை சுரங்க...

இலங்கையின் மூன்றாவது நெனோ செயற்கைக்கோள் விண்வெளிக்கு!

உள்ளூர் பொறியாளர்களின் தொழில்நுட்ப பங்களிப்புடன் உருவாக்கப்பட்ட மூன்றாவது நெனோ செயற்கைக்கோளை இன்று...

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் அவ்வப்போது மழை!

இன்றையதினம் (19) நாட்டின் மேல், சப்ரகமுவ, மத்திய, வடக்கு, வடமேல் மாகாணங்களிலும்...