களுத்துறை சிறைச்சாலையில் உள்ள முஸ்லிம் கைதிகளுக்காக இப்தார் நிகழ்வொன்று மார்ச் 24 ஆம் திகதி இடம்பெற்றது.
இந்த நிகழ்வை களுத்துறை மாவட்ட ஜனாஸா சேவைகள் சங்கம் ஏற்பாடு செய்திருந்தது.
சிறைச்சாலையின் உயர் பொலிஸ் அதிகாரிகள், பௌத்த, கிறிஸ்தவ மற்றும் முஸ்லிம் மதகுருமார்கள், திடீர் மரண விசாரணை அதிகாரி, மற்றும் களுத்துறை மாவட்ட ஜனாஸா சேவைகள் சங்கத்தின் முக்கியஸ்தர்கள் இந்நிகழ்வில் கலந்து சிறப்பித்தனர்.
இந்நிகழ்வு, முஸ்லிம் கைதிகளின் மத தேவைகளை ஆதரிக்கும் விதமாகவும், சமுதாய ஒற்றுமையை மேம்படுத்தும் நோக்கிலும் முக்கியத்துவம் பெறுகிறது.