சில மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும்

Date:

கிழக்கு மாகாணத்திலும் முல்லைத்தீவு மாவட்டத்திலும் சிறிதளவில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை மற்றும் குருநாகல் மாவட்டங்களிலும் சில இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடியசாத்தியம் காணப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் சில இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது தென்கிழக்கு  திசையிலிருந்து அல்லது மாறுபட்ட திசைகளிலிருந்து வீசக் கூடுவதுடன் காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 20 முதல் 30 கிலோ மீற்றர் வரை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகள் அவ்வப்போது சாதாரண முதல் மிதமான அலை வரை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

 

Popular

More like this
Related

செப்டம்பர் 17-19 திகதிகளில் இந்தோனேசியாவில் நடைபெறும் மதங்களுக்கிடையிலான கருத்தரங்கு!

அஷ்ஷைக்.எஸ்.எச்.எம். பளீல் இந்தோனேசியாவில் இருந்து... "மத சுதந்திரமும் ஆசியாவில் மத சிறுபான்மையினது உரிமைகளும்"...

2025 ஆம் ஆண்டின் முதல் ஏழு மாதங்களில் 300 கொலைச் சம்பவங்கள் பதிவு.

2025 ஆம் ஆண்டின் முதல் ஏழு மாதங்களில் 300 கொலைச் சம்பவங்கள்...

காஸா மீதான போரை நிறுத்தக்கோரி நாளை சென்னையில் மாபெரும் பேரணி

கடந்த இரண்டு ஆண்டுகளாக காஸாவில் இஸ்ரேல் மேற்கொண்டு வரும் காட்டுமிராண்டித்தனமான இனச்...

மின்சார சபை ஊழியர்களின் பணிப்புறக்கணிப்பால் கடும் போக்குவரத்து நெரிசல்

சுகவீன விடுமுறையை அறிவித்து முன்னெடுக்கப்படும் பணிப்புறக்கணிப்பை தொடர்ந்து மின்சார சபை தொழிற்சங்கங்கள்...