வக்பு சொத்தை மீட்க போராடிய பள்ளிவாசல் தலைவர் படுகொலை: மனித நேய ஜனநாயகக் கட்சி கடும் கண்டனம்

Date:

திருநெல்வேலியில்  வக்பு சொத்தை மீட்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வந்த  பள்ளிவாசல் ஜமாத் தலைவர் ஜாகிர் உசேன் பிஜிலி (60) படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் மனித நேய ஜனநாயகக் கட்சி கடும் கண்டனங்களை வெளியிட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் கட்சி விடுத்துள்ள அறிக்கையில்,

திருநெல்வேலி டவுன் பள்ளிவாசல் ஜமாத் தலைவர் ஜாகிர் உசேன் பிஜிலி சமூக விரோதிகளால் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

வக்பு சொத்தை மீட்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வந்த அவர் தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக இரண்டு மாதங்களுக்கு முன்பு காணொளி மூலம் அனைவரும் பார்க்கும் வகையில் தகவல் பரிமாறினார். இரண்டு நாட்களுக்கு முன் நெல்லை கமிஷனர் அலுவலகத்தில் மீண்டும் புகார் அளித்துள்ளார்.

இந்நிலையில், நேற்று (18) தொழுகை முடித்துவிட்டு வரும் வழியில் சமூக விரோதிகளால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார். ஏற்கனவே, நெல்லை, மேலப்பாளையத்தில் வக்பு சொத்தை மீட்கும் பணியில் ஈடுபட்ட சாகுல் ஹமீது என்பவர் படுகொலை செய்யப்பட்டார்.

சென்ற மாதம் புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்தில் கனிமவள கொள்ளை குறித்து அரசு அதிகாரிகளிடம் புகார் அளித்த ஜவஹர் அலி என்பவர் படுகொலை செய்யப்பட்டார்.

பொதுச் சொத்துக்களை கொள்ளையடிப்பவர்கள் சம்பந்தமாக விழிப்போடு செயல்பட்டுக் கொண்டிருக்கும் சமூக செயற்பாட்டாளர்கள் தொடர்ந்து படுகொலை செய்யப்படுவது வன்மையாக கண்டிக்கத்தக்கது.

ஜாகிர் உசேன் பிஜிலியை படுகொலை செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காத காவல்துறையினர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

குடும்பத் தலைவரை இழந்து வாடும் அந்தக் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும், ரூபாய் 50 இலட்சம் நிவாரணமும் வழங்க வேண்டும் என்று மனிதநேய ஜனநாயக கட்சி சார்பில் கேட்டுக்கொள்கிறோம் என குறித்த கண்டன அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

சூடான் உள்நாட்டு போரில் ஆயிரக்கணக்கானோர் மாயம்

சூடானின் எல் - பாஷர் நகரை, துணை இராணுவப் படையான ஆல்.எஸ்.எப்., கைப்பற்றிய...

நவம்பர் 3 முதல் 10 காதி சபைகளுக்கான புதிய நியமனங்கள்: புத்தளம் காதி நீதிபதியாக என்.அஸ்மீர் நியமனம்.

நீண்ட நாட்களாக வெற்றிடமாகக் காணப்பட்ட 10 காதி சபைகளுக்கான நியமனங்களை நவம்பர்...

தேசிய அடையாள அட்டைகள் தடையின்றி வழங்கப்படும்.

தேசிய அடையாள அட்டைகளை தடையின்றி தொடர்ந்து வழங்க முடியுமென ஆட்பதிவுத் திணைக்களம்...

க.பொ.த உயர்தரப்பரீட்சை: அனுமதி அட்டைகள் கிடைக்காதோருக்கு அறிவிப்பு

க.பொ.த உயர்தரப் பரீட்சை  இம்மாதம் 10 ஆம் திகதி ஆரம்பமாகி  எதிர்வரும் ...