மதப் பிரச்சாரங்களுக்கு வெளிநாட்டிலிருந்து வருகைத் தருவோர்களுக்கு கடுமையான விசா நடைமுறைகளை பின்பற்றுமாறு குடிவரவு குடியகல்வு திணைக்களம் எச்சரித்துள்ளது.
சாதாரண சுற்றுலா விசாவில் நாட்டுக்குள் வந்து ஆராதனைக் கூட்டங்களையும் வணக்க வழிபாடுகளையும் நிகழ்த்தி வருவது தொடர்ச்சியாக அவதானிக்கப்பட்ட பின்னரே இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டதாக திணைக்களம் தெரிவித்துள்ளது.
யாழ்ப்பாணம் மாதகல் Evangelical தேவாலயங்களில் கடந்த 5,6,7ஆம் திகதிகளில் ஏற்பாடு செய்யப்பட்ட ஆராதனைக்கு இரண்டு இந்திய பிரசாரகர்கள் வந்ததைத் தொடர்ந்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மதப்பிரச்சாரங்களுக்கென நாட்டுக்குள் வருகின்ற பிரசாரகர்கள் புத்தசாசன மத மற்றும் கலாசார அமைச்சினதும் பாதுகாப்பு அமைச்சினதும் அங்கீகாரத்தைப் பெற்று குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் விசாவுக்கு விண்ணப்பித்த பின்னரே நாட்டுக்குள் நுழைய முடியுமென திணைக்களம் தெரிவித்துள்ளது
கடந்த மார்ச் மாதம் தமிழ்நாட்டை சேர்ந்த போதகர் போல் தினகரன் யாழ்ப்பாணத்தில் நடந்த ஆராதனையில் கலந்துகொள்ள வந்தபோது இந்துக்களின் பலத்த எதிர்ப்பினையடுத்து திருப்பியனுப்பப்பட்டுள்ளார்.
இந்த வருடம் மார்ச் மாதம் மத போதனைக்கு வந்தபோது இவர்களின் கடவுச்சீட்டை திணைக்களம் பறிமுதல் செய்ததுடன் அவர்கள் கடந்த புதன்கிழமை உடனடியாக நாட்டை விட்டு அனுப்புவதற்கு முயற்சிகள் எடுக்கப்பட்டிருந்தன.
வெளிநாடுகளிலிருந்து வரும் மதபோதகர்கள் உள்நாட்டில் இன அமைதியின்மையை ஏற்படுத்துவதற்கு வாய்ப்புக்கள் இருப்பதாகவும் திணைக்களம் தெரிவித்துள்ளது.