ஹமாஸை பணிய வைப்பதற்காக இன்று முதல் காசாவுக்கு எதிரான இராணுவ நடவடிக்கைகள் தொடங்கப்படலாம்: இஸ்ரேல் ஊடகங்கள் தெரிவிப்பு

Date:

ஹமாஸை பணிய வைப்பதற்காக இன்று முதல் காசாவுக்கு எதிரான இராணுவ நடவடிக்கைகள் தொடங்கப்படலாம் என இஸ்ரேல் தரப்பு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இஸ்ரேல்- ஹமாஸ் அமைப்பினர் இடையே போர் நடைபெற்று வந்த நிலையில், ஒப்பந்தம் ஏற்பட்டு கடந்த ஜனவரி மாதம் 19 போர் நிறுத்தம் ஏற்பட்டது.

ஏழு வார ஒப்பந்தம் நிறைவு பெற்றதும், 2-வது கட்ட ஒப்பந்தம் அதனைத் தொடர்ந்து நீடிக்கும் வகையில் பேச்சுவார்த்தை நடத்த முடிவு செய்யப்பட்டது. ஆனால் வாரக்கால போர் நிறுத்தம் இந்த மாதம் தொடக்கத்தில் நிறைவடைந்த நிலையில், அடுத்தக்கட்ட போர் நிறுத்தத்திற்கான ஒப்பந்தம் ஏற்படவில்லை.

இதேவேளை முதற்கட்ட போர் நிறுத்த ஒப்பந்தத்தை இஸ்ரேல் நடைமுறைப்படுத்தினால் மாத்திரமே அமெரிக்க பணயக் கைதிகள் விடுவிக்கப்படுவார்கள் என ஹமாஸ் அமைப்பு அறிவித்துள்ளது.

அமெரிக்க-இஸ்ரேல் பணயக் கைதி ஒருவர் நேற்று விடுவிக்கப்பட்ட நிலையில், உயிரிழந்த 4 பணயக் கைதிகள் உடல் ஒப்படைக்கப்படுவதற்கும், அமெரிக்க பணயக் கைதிகள் விடுவிக்கப்படுவதற்கும் தமது கோரிக்கையை இஸ்ரேல் ஏற்கவேண்டும் என ஹமாஸ் கூறியுள்ளது.

இது தொடர்பாக ஹமாஸ் அமைப்பின் மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில்,

“போர் நிறுத்தத்தின் இரண்டாம் கட்டம் குறித்து நீண்டகாலமாக தாமதமாகி வரும் பேச்சுவார்த்தைகள் விடுதலை செய்யப்பட்ட நாளிலிருந்து தொடங்கி 50 நாட்களுக்கு மேல் நீடிக்கக்கூடாது.

மனிதாபிமான உதவிகள் நுழைவதைத் தடுப்பதை இஸ்ரேல் நிறுத்திவிட்டு, எகிப்துடனான காசா எல்லை பாதையில் இருந்து விலக வேண்டும்.

பணயக் கைதிகளுக்கு ஈடாக மேலும் பல பலஸ்தீன கைதிகளை விடுவிக்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக இஸ்ரேல் பிரதமர், இது ஹமாஸின் சூழ்ச்சி மற்றும் உளவியல் போர் என குற்றம் சாட்டியிருந்தார்.

நிரந்தர போர் நிறுத்தத்திற்கு பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வரும் நிலையில், இன்னும் சில வாரங்களுக்கு போர் நிறுத்தம் நீடிப்பதற்கான திட்டத்தை முன்வைப்பதாக அமெரிக்கா கடந்த புதன்கிழமை தெரிவித்திருந்தது.

அதே நேரத்தில் முற்றிலும் நடைமுறைக்கு மாறான கோரிக்கைகளை தனிப்பட்ட முறையில் முன்வைப்பதாகவும் ஹமாஸ் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

நாட்டில் சில இடங்களில் ஓரளவு பலத்த மழை பெய்யலாம்

வடக்கு, கிழக்கு, வடமத்திய, மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களின் பல...

சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் ஹிஜாப் விவகாரம் தொடர்பில் ரிஷாத் பதியுதீன் அமைச்சருக்கு கடிதம்!

திருகோணமலையில்  சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் அரசியலமைப்பு உரிமைகளைப் பாதுகாக்க...

காலாவதியான பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்த முன்னணி பல்பொருள் அங்காடிக்கு அபராதம்

காலாவதியான உணவுப் பொருட்களை விற்பனை செய்ததாக குற்றத்தை ஒப்புக்கொண்டதால், முன்னணி பல்பொருள்...

உள்ளூராட்சி நிறுவனங்களின் செயற்பாடுகளில் பிரஜைகளின் பங்களிப்பை விரிவுபடுத்துவது தொடர்பில் கவனம் 

உள்ளூராட்சி நிறுவனங்களின் செயற்பாடுகளில் பிரஜைகளின் பங்களிப்பை விரிவுபடுத்துவது தொடர்பில் திறந்த பாராளுமன்ற...