99 நாடுகளைச் சேர்ந்த மாணவர்கள் ஒரே இடத்தில் இப்தார் செய்யும் அற்புதமான காட்சி

Date:

சவூதி அரேபியாவில் உள்ள புனித நகரான மதீனா முனவ்வராவில் அமைந்திருக்கின்ற இஸ்லாமியப் பல்கலைக்கழகம் முழு உலகத்தையும் பிரதிநிதித்துவப்படுத்தி பல்லாயிரக்கணக்கான மாணவர்கள்  கல்வி கற்கின்ற ஒரேயொரு கலாபீடமாகும்.

இக்கலாபீடமானது முஸ்லிம்கள் மத்தியில் இஸ்லாம் தொடர்பாகவும் இஸ்லாம் கற்கை நெறிகள் தொடர்பான பாடநெறிகளையும் உள்ளடக்கி இளமாணி, முதுமானி கலாநிதி பட்டங்களை வழங்குகின்ற மிகவும் பிரபல்யமான ஒர் பல்கலைக்கழகமாகும்.

உலகின் எல்லா நாடுகளிலுமுள்ள மாணவர்கள் சவூதி அரேபியாவின் புலமைப்பரிசிலைப் பெற்று இப்பல்கலைக்கழகத்தில் கல்வி கற்று வருகின்றார்கள்.

இந்த பல்கலைக்கழக மாணவர்கள் அனைவரையும் ஒன்றிணைத்து இந்த ரமழானில் ஒரு சிறப்பான நிகழ்வு இடம்பெற்றுள்ளது.

அதாவது எல்லா மாணவர்களையும் ஒரே இடத்தில் ஒன்று சேர்த்து அவர்கள் நோன்பு துறக்கின்ற ஓர் அற்புதமான நிகழ்வு இடம்பெற்றது.

மாணவர்களின் ஒற்றுமையை வெளிப்படுத்தும் இந்த நிகழ்வு,  சகோதரத்துவம் மற்றும் சமுதாய ஒற்றுமையின் அடையாளமாக அமைந்துள்ளது.

இது தொடர்பான வீடியோ காட்சி…..

99 நாடுகளைச் சேர்ந்த மாணலர்கள் ஒரே இடத்தில் நோன்பு துறக்கின்ற இந்த அற்புதமான காட்சியை சவூதி அரேபியாவின் அல்அரபியா உடகம் காட்சிப்படுத்தியுள்ளது.

இந்த நிகழ்வு மாணவர்களுக்கு மட்டுமல்லாது, உலக முஸ்லிம் சமுதாயத்திற்கும் ஒன்றுபட்ட உணர்வை வழங்கியது.

இஸ்லாத்தின் கோட்பாட்டின் படி முஸ்லிம்கள் எல்லோரும் ஒன்று என்ற கோட்பாட்டை நிரூபிக்கும் வகையிலான காட்சியாக  அமைந்திருக்கின்றது.

Popular

More like this
Related

கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு 10 மணிநேர நீர்வெட்டு

கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு நாளை மறுதினம்  (09) நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக...

போட்டி முடிவின் பின் “Free palestine ” T Shairt ஐ காட்டி ஆதரவு வெளியிட்டதற்காக இலங்கை கால்பந்து வீரர் தில்ஹாமுக்கு $2000 அபராதம்!

போட்டி முடிவடைந்த பின்னரான வெற்றிக் கொண்டாட்டத்தின் போது பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக சுலோகத்தைக்...

இலங்கை மீதான அமெரிக்காவின் வரிக்குறைப்பு தொடர்பில் பாராளுமன்றில் ஜனாதிபதி விளக்கம்

இலங்கை மீது விதிக்கப்பட்ட வரிகளை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் 20%...