போதைப்பொருள் கடத்தல் இஸ்ரேலில் அனுமதிக்கப்பட்டதைத் தொடர்ந்து அங்கு போதைப்பொருள் பாவனை அதிகரித்து வருகிறது.
இதன் விளைவாக இலங்கையிலிருந்து வேலைக்குச் சென்றுள்ள பணியாளர்கள் ஐஸ் மற்றும் மர்ஜுவானா போதைப்பொருட்களுக்கு அடிமையாகியுள்ளதாக இஸ்ரேலுக்கான இலங்கை தூதுவர் நிமல் பண்டார தெரிவித்துள்ளார்.
இது இலங்கை பணியாளர்களின் மன நிலையில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாகவும் தங்களது தொழிலை பாதுகாத்துக் கொள்வதா? அல்லது இழப்பதா? என்ற பொறுப்பை அவர்களே ஏற்றுக்கொள்ள வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இலங்கையிலிருந்து தொழிலுக்காக சென்றுள்ளவர்கள் அங்கு சமூக ஊடகக் குழுக்களை உருவாக்கி அதனூடாக தமது வசதிகளை அதிகரிக்கக் கோரி ஆர்ப்பாட்டங்களுக்கு ஏற்பாடு செய்து வருவதாகவும் இது அவர்களது விசாவை ரத்துச்செய்யும் அபாயம் இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
கட்டட நிர்மாணப்பணிகளுக்காக இன்று இலங்கையிலிருந்து செல்லும் 217 இலங்கை தொழிலாளர்களுக்கு மத்தியில் ஒன்லைனில் உரையாற்று போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இஸ்ரேலுக்கு கட்டட நிர்மாணப் பணிக்களுக்காக 6096 பேருக்கு. தொழில் வாய்ப்பு கிடைத்துள்ள நிலையில் 1018 பேர் ஜனவரியில் இஸ்ரேல் சென்றுள்ளனர். இன்னும் இரண்டு குழுவினர் மார்ச் 10,25ஆம் திகதிகளில் வெளியேறி செல்லவுள்ளனர்.