உள்ளூராட்சி மன்றத் தேர்தல்: – தபால் மூல விண்ணப்ப காலம் நீடிப்பு!

Date:

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால்மூல வாக்காளர் விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் காலம் நீடிக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

அறிக்கை ஒன்றை வௌியிட்டு தேர்தல்கள் ஆணைக்குழு இதனைத் தெரிவித்துள்ளது.

அதன்படி, இன்று நள்ளரவு 12.00 மணியுடன் நிறைவடையவிருந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கு விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் திகதி, தபாலில் ஏற்படக்கூடிய கால தாமதங்களையும் தேர்தல் ஆணைக்குழுவுக்கு விடுக்கப்பட்ட கோரிக்கைகளையும் கவனத்திற்கொண்டு மார்ச் மாதம் 17ஆம் திகதி நள்ளிரவு 12.00 மணிவரை நீடிக்கப்படுவதாக மேற்படி அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை தபால்மூல வாக்காளர்களின் வசதிக்காக நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து தேர்தல் தொகுதிகளுக்கும் 2024ஆம் ஆண்டுக்கான வாக்காளர் பட்டியல்கள் காட்சிப்படுத்தப்படுத்தப்பட்டுள்ள என்றும் என தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

அதன்படி, அனைத்து மாவட்ட செயலக அலுவலகங்கள், அனைத்து பிரதேச செயலக அலுவலகங்கள், அனைத்து கிராம உத்தியோகத்தர் அலுவலகங்கள் மற்றும் தெரிவு செய்யப்பட்ட சில இடங்களில் வாக்காளர் பெயர் பட்டியல் காட்சிப்படுத்தப்படவுள்ளது.

தபால் மூல வாக்களிப்பு விண்ணப்பங்கள் வாக்காளர் பட்டியல் காட்சிப்படுத்தப்படும் இடங்களிலிருந்தும், மாவட்ட தேர்தல் அலுவலகங்களிலிருந்தும் இலவசமாகக் கிடைக்கும் மற்றும் ஆணைக்குழுவின் இணையதளத்தில் இருந்தும் பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

சூடான் உள்நாட்டு போரில் ஆயிரக்கணக்கானோர் மாயம்

சூடானின் எல் - பாஷர் நகரை, துணை இராணுவப் படையான ஆல்.எஸ்.எப்., கைப்பற்றிய...

நவம்பர் 3 முதல் 10 காதி சபைகளுக்கான புதிய நியமனங்கள்: புத்தளம் காதி நீதிபதியாக என்.அஸ்மீர் நியமனம்.

நீண்ட நாட்களாக வெற்றிடமாகக் காணப்பட்ட 10 காதி சபைகளுக்கான நியமனங்களை நவம்பர்...

தேசிய அடையாள அட்டைகள் தடையின்றி வழங்கப்படும்.

தேசிய அடையாள அட்டைகளை தடையின்றி தொடர்ந்து வழங்க முடியுமென ஆட்பதிவுத் திணைக்களம்...

க.பொ.த உயர்தரப்பரீட்சை: அனுமதி அட்டைகள் கிடைக்காதோருக்கு அறிவிப்பு

க.பொ.த உயர்தரப் பரீட்சை  இம்மாதம் 10 ஆம் திகதி ஆரம்பமாகி  எதிர்வரும் ...