சர்வதேச மனித உரிமைகள் சேவைகள் அமைப்பின் தேசிய நல்லிணக்கத்திற்கான சிரேஷ்ட ஆலோசகர்களாக சர்வமத தலைவர்கள் நியமனம்..!

Date:

சர்வதேச மனித உரிமைகள் உலகளாவிய சேவைகள் அமைப்பின் தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்திற்கான சிரேஷ்ட ஆலோசகர்களாக சர்வமத தலைவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்கள்.

அதற்கமைய,  சர்வமத தலைவர்களான சாஸ்த்ரபதி கலாநிதி கலகம தம்மரன்சி நாயக்க தேரர், சிவஸ்ரீ  கலாநிதி ராமச்சந்திர குருக்கள் பாபு சர்மா, அல்-ஹாஜ் அஷ்-ஸெய்யித் கலாநிதி ஹஸன் மெளலானா அல்-காதிரி, அருட்தந்தை கலாநிதி நிஷான் சம்பத் குரே ஆகியோர் இந்த பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளார்கள்.

நேற்றைய தினம் (23)  இதற்கான நிகழ்வு ‘கொழும்பு மெரைன் கிரேன்ட் மண்டபத்தில் இஃப்தார் நிகழ்வுடன் ஏற்பாடு செய்யப்பட்டது.

இவர்களுக்கான நியமனக் கடிதங்கள் சர்வதேச மனித உரிமைகள் உலகளாவிய சேவைகள் அமைப்பின் தலைவர் கலாநிதி அமீர்கான், பாராளுமன்ற பிரதி சபாநாயகர் டாக்டர் ரிஸ்வி சாலிஹ் ஆகியோரால் வழங்கி வைக்கப்பட்டன.

நாட்டின் தேசிய ஒற்றுமை, சகவாழ்வை வலுப்படுத்தவும், சகல இனங்களுக்கிடையில் சமாதானத்தையும் சகவாழ்வினையும் கட்டியெழுப்பும் நோக்கில் அனைத்து இனங்களையும் பிரதிநிதிப்படுத்தும் வகையில் சர்வ மத நிகழ்ச்சிகளை ஒழுங்குபடுத்தி இவ்வமைப்பிற்கு பொறுப்பளிக்கப்பட்டுள்ள செயற்பணிகளை ஒருங்கிணைப்பதே இப்பதவியின் பிரதான இலக்காகும்.

சர்வமத தலைவர்களான சாஸ்த்ரபதி கலாநிதி கலகம தம்மரன்சி நாயக தேரர், சிவஸ்ரீ கலாநிதி ராமச்சந்திர குருக்கள் பாபு சர்மா, அல்ஹாஜ் அஷ்-ஸெய்யித் கலாநிதி ஹஸன் மெளலானா அல்காதிரி, அருட்தந்தை கலாநிதி நிஷான் சம்பத் குரே பாதர் ஆகியோர் ‘இலங்கையிலும் சர்வதேச ரீதியிலும் இன ஒற்றுமைக்காக பல்வேறு செயல்பாடுகளை 20வது வருடங்களுக்கு மேலாக முன்னெடுத்து வருகின்றனர்.

அதுமாத்திரமின்றி இலங்கையில் இனங்களுக்கு இடையில் ஐக்கியம் மற்றும் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதில் தங்களுடைய அனுபவரீதியான செயல்பாடுகளை கடந்த காலங்களில் நிரூபித்துக் காட்டியவர்களாவர்.

சர்வ மத கூட்டமைப்பின் முக்கியஸ்தவர்களாகவும் சிறந்த இன ஒற்றுமைக்கான முன்மாதிரி மிக்கவர்களாகவும் இவர்கள் செயற்பட்டு வந்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

Popular

More like this
Related

திரைப்பட கூட்டுத்தாபனத்தை மாற்றியமைக்க திட்டம்: அமைச்சரவை அனுமதி

இலங்கை திரைப்படக் கூட்டுத்தாபனத்தின் சட்டத்தை நீக்கி புதிய சட்டத்தை அறிமுகப்படுத்த அமைச்சரவை...

இலங்கையில் முதன்முறையாக உலக கெரடோகோனஸ்  தினம் அனுஷ்டிப்பு.

உலக கெரடோகோனஸ் தினம் (World Keratoconus Day ) ஒவ்வொரு ஆண்டும்...

இலங்கை மேசைப் பந்து விளையாட்டு வரலாற்றில் தாவி சமரவீர புதிய மைல்கல்

11 வயதிற்குட்பட்ட உலக மேசைப் பந்து தரவரிசையில் இலங்கையைச் சேர்ந்த தாவி...

டெல்லி கார் குண்டு வெடிப்பு: 13 பேர் கொல்லப்பட்டதையடுத்து பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் அமுலில்.

டெல்லியின் வரலாற்றுச் சிறப்புமிக்க செங்கோட்டைப் பகுதிக்கு அருகே இன்று நடந்த சக்திவாய்ந்த...