சூடான் கார்டூம் பள்ளிவாசல் மீது துணை இராணுவம் தாக்குதல்: ஐவர் பலி

Date:

சூடானின் தலைநகரான கார்டூமில் கிழக்கு நிலி மாவட்டத்தில் உள்ள பள்ளிவாசல் ஒன்றின் மீது, துணை இராணுவப்படையினர் நடத்திய பீரங்கித்  தாக்குதலில் 5 பேர் உயிரிழந்துள்ளனர்.

தொழுகைக்காக கூடியிருந்த வழிபாட்டாளர்களை இலக்காகக் கொண்டு இஸ்லாமிய மத வழிபாட்டு தலத்தைக் குறிவைத்தே இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இத் தாக்குதலில் 5 பேர் உயிரிழந்துள்ளதுடன்  பலர் படுகாயமடைந்துள்ளனர். தலைநகர் கார்டூமினை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவர இராணுவம் தீவிர நடவடிக்கை எடுத்து வரும் நிலையில் துணை இராணுவப்படையினர் இத் தாக்குதலை நடத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சூடான் நாட்டில் கடந்த 2021ம் ஆண்டு இராணுவம் ஆட்சியை கைப்பற்றியது. இந்த ஆட்சியின் தலைவராக இராணு தளபதியான ஜெனரல் படக் அல்-பர்ஹன் செயல்பட்டு வருகிறார். அவருக்கு அடுத்த நிலையில் ஆட்சியின் துணைத்தலைவராக துணை இராணுவப்படையின் தளபதியான ஜெனரல் முகமது ஹம்டன் டகலோ செயல்பட்டு வருகிறார்.

இதனிடையே, துணை இராணுவத்தின் படைப்பிரிவுகளில் ஒன்றான அதிவிரைவு ஆதரவு படையினரை இராணுவத்துடன் இணைக்க இராணுவ தளபதியான ஜெனரல் படக் அல்-பர்ஹன் முயற்சி மேற்கொண்டார். இதற்கு துணை இராணுவப்படையின் அதிவிரைவு ஆதரவு படையினர் தரப்பில் எதிர்ப்பு கிளம்பியது.

இதனால், இராணுவத்திற்கும், துணை இராணுவத்திற்கும் இடையே கடந்த 2023ம் ஆண்டு ஏப்ரல் 15ம் திகதி முதல் கடும் மோதல் ஏற்பட்டுள்ளது. துணை இராணுவத்தின் அதிவிரைவு ஆதரவு படையினர் மீது இராணுவத்தினர் தாக்குதல் நடத்தினர். இதற்கு பதிலடியும் கொடுக்கப்பட்டு வருகிறது. இந்த மோதலில் அப்பாவி பொதுமக்களும் உயிரிழந்து வருகின்றனர்.

கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளாக, இடம்பெற்று வரும் இந்த மோதலால் பல்லாயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டனர், 12 மில்லியனுக்கும் அதிகமானோர் இடம்பெயர்ந்தனர்.

இரண்டு நாட்களுக்கு முன்னர் மத்திய கார்ட்டூமை இராணுவம் மீண்டும் கைப்பற்றியதிலிருந்து பொதுமக்கள் மீதான இரண்டாவது தாக்குதல் இதுவாகும்.

Popular

More like this
Related

பழம்பெரும் ஈழத்துத் திரைப்பட நடிகரும்,“அபுநானா நாடகப்புகழ்” கலைஞா் எம்.எம்.ஏ. லத்தீப் காலமானாா்.

பழம்பெரும் ஈழத்துத் திரைப்பட நடிகரும், தொலைக்காட்சி “அபுநானா நாடகப்புகழ்” மற்றும் முஸ்லிம்...

கொழும்பு பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவன் தற்கொலை!

கொழும்பு பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் இறுதியாண்டு பயின்று வந்த மருத்துவ மாணவர்...

தேசபந்துவை பதவி நீக்கும் யோசனை நிறைவேற்றம்: ஆதரவாக 177 வாக்குகள்

தேசபந்து தென்னகோனை பொலிஸ் மா அதிபர் பதவியில் இருந்து நீக்குவதற்கான பிரேரணை...

எல்லை நிர்ணயத்துக்கு புதிய குழுவை நியமிக்க அமைச்சரவை அங்கீகாரம்

எல்லை மீள் நிர்ணயத்துக்கென புதிய குழுவொன்றை நியமிப்பதற்கு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க...