ஜனாதிபதி அலுவலகத்திற்கு சொந்தமான 14 வாகனங்கள் ஏலத்தில்…!

Date:

ஜனாதிபதி அலுவலகத்திற்கு சொந்தமான 14 சுகபோக வாகனங்கள் மற்றும் பாவனையிலிருந்து ஒதுக்கப்பட்ட 6 வாகனங்கள், வாகன உதிரிப் பாகங்களை விற்பனை செய்வதற்கான ஏலம் நேற்று (28) நடைபெற்றது.

அரசாங்கத்தின் செலவுகளை குறைத்தல் மற்றும் நிதி பொறுப்புக்களை ஊக்குவிப்பதை நோக்கமாக கொண்டு இவ்வாறு ஜனாதிபதி அலுவலகத்திற்கு சொந்தமான வாகனங்களை விற்பனை செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதன்படி 9 டிபெண்டர் ரக ஜீப்கள், வொல்வோ ரக ஜீப் ஒன்று, கரயிஸ்லர் ரக வாகனம் ஒன்று, மஹேந்திரா பொலெரோ வாகனம் ஒன்று, ரோஸா பஸ் ஒன்று, டிஸ்கவரி வாகனம் மற்றம் டொயாடோ மோட்டார் வாகனம் உள்ளடங்களாக 15 வாகனங்கள் நேற்று ஏலமிடப்பட்டிருந்ததுடன், மிகுதி வாகனங்களும் விரைவில் ஏலமிடப்படவுள்ளன.

இந்த வாகனங்கள் ஜனாதிபதி செயலகத்தின் நிரந்தர பணிக்குழாமிற்காக வழங்கப்பட்டிருந்த வாகனங்கள் இல்லை என்பதுடன், முன்னாள் ஜனாதிபதியினால் தனது பதவிக் காலத்தில் அரசியலமைப்பின் 41 (1) உறுப்புரையின் கீழ் நியமிக்கப்பட்ட ஆலோசகர்கள் மற்றும் பணிக்குழுவினால் பயன்படுத்தப்பட்ட வாகனங்களாகும்.

இந்த வாகனங்ளை கொள்வனவு செய்வதற்கு பெருமளவான கேள்வி காணப்பட்டதுடன் ஏலங்களை ஏற்றுக்கொள்வது நேற்று பகல் 12.00 மணி வரையில் இடம்பெற்றதுடன், இரவு 8.00 மணி வரையில் ஏலம் திறக்கப்பட்டது. இந்த சந்தர்ப்பத்தில் 199 வர்த்தகர்கள் கலந்துகொண்டிருந்தனர்.

 

Popular

More like this
Related

சபரிமலை யாத்திரை இலங்கை அரசாங்கத்தின் அங்கீகரிக்கப்பட்ட யாத்திரையாக பிரகடனம்

இந்தியாவின் கேரளாவில் உள்ள புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு புனித யாத்திரை...

தொடர்ந்தும் தலைமறைவானால் ராஜிதவின் சொத்துக்கள் பறிமுதலாகும்: இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுஆணைக்குழு

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன தொடர்ந்தும் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவானால் அவரது...

முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த காலமானார்!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான...

யானைகள் இறப்பு விகிதத்தில் உலகளவில் இலங்கை முதலிடம்!

யானைகள் இறப்பு விகிதத்தில் இலங்கை தற்போது உலகிலேயே முதலிடத்தில் உள்ளதாக வனவிலங்கு...