தேசபந்து தென்னகோனுக்கு எதிரான பிரேரணை இன்று நாடாளுமன்ற ஒழுங்கு புத்தகத்தில்!

Date:

தேசபந்து தென்னகோனை பொலிஸ் மா அதிபர் பதவியிலிருந்து நீக்குவது தொடர்பில் சபாநாயகரிடம் முன்வைக்கப்பட்டுள்ள பிரேரணை இன்றைய தினம் நாடாளுமன்ற ஒழுங்கு புத்தகத்தில் உள்ளடக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நாடாளுமன்ற தொடர்பாடல் திணைக்களம் இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளது.

குறித்த பிரேரணையை ஆளும் கட்சியின் பிரதியமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அடங்கிய குழுவினர் நேற்றைய தினம் (25) சபாநாயகரிடம் கையளித்துள்ளனர்.

தேசபந்து தென்னகோன் 2002 ஆம் ஆண்டு 5 ஆம் இலக்க அதிகாரிகளை நீக்குதல் சட்டத்தின் இரண்டு சரத்துக்களை மீறியுள்ளதாக அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

2023ஆம் ஆண்டு இடம்பெற்ற மனித கொலைக்கான சூழ்ச்சியை மேற்கொண்ட குற்றச்சாட்டின் கீழ் நீதிமன்றில் சரணடைந்ததன் பின்னர், தேசபந்து தென்னகோன் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

பொலிஸ்மா  அதிபர் பதவியிலிருந்த ஒருவரை விலக்குவதற்காக 2002ஆம் ஆண்டின் 5ஆம் இலக்க அலுவலர்களை நீக்கும் சட்டத்தின் கீழ் 8 காரணங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.

அதில் இரண்டு காரணங்களை மேற்கோள் காட்டி, பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோனை அந்த பதவியிலிருந்து நீக்குவதற்கான பிரேரணையை தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையளித்துள்ளனர்.

இதேவேளை, 115 நாடாளுமன்ற உறுப்பினர்களின் கையொப்பத்துடன் இந்த பிரேரணை சபாநாயகரிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ள நிலையில் அதற்கு தமது ஆதரவை வழங்குவதாகப் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி அறிவித்துள்ளது.

 

Popular

More like this
Related

சுரேஷ் சலேயின் உடல் ஆரோக்கியம் மோசமடைந்து வருவதால் ஜனாதிபதிக்கு கடிதம்

அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலேயின் ஆரோக்கிய நிலைமை...

இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் ஏற்பாட்டில் நாளை புத்தளத்தில் இஸ்லாமிய மாநாடு!

இலங்கையில் பல தசாப்த காலங்களாகத் தொடர்ந்து இஸ்லாமியப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு...

நாட்டை சுற்றியுள்ள கடற்பரப்புகளுக்கு சிவப்பு எச்சரிக்கை !

காங்கேசன்துறையிலிருந்து மன்னார் ஊடாக கற்பிட்டி வரையான கடற்பரப்புகளுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் பலத்த...

தொழுநோய் ஒழிப்பிற்கான உலக சுகாதார அமைப்பின் தூதுவருடன் அமைச்சர் நலிந்த சந்திப்பு

தொழுநோய் ஒழிப்பிற்கான உலக சுகாதார அமைப்பின் (WHO) நல்லெண்ண தூதுவர் யோஹெய்...