பஹன மீடியா ஒத்துழைப்பில் இன்று ருஹுனு பல்கலைக்கழகத்தில் இப்தார் நிகழ்வு..!

Date:

ருஹுனு பல்கலைக்கழக முஸ்லிம் மஜ்லிஸ் ஏற்பாட்டில் நடக்கும் ‘இப்தார் அல் வஹ்தா’ நிகழ்வு இன்று (25) பிற்பகல் 4 மணி முதல் ருஹுனு பல்கலைக்கழக  உள்ளக அரங்கில் நடைபெறவுள்ளது.

நிகழ்வில் பிரதம அதிதியாக பல்கலைக்கழக  உபவேந்தர் சிரேஷ்ட பேராசிரியர் பி.ஏ.ஜயந்த கலந்துகொள்ளவுள்ளார்.

முஸ்லிம் மஜ்லிஸின் தலைவர் அல்தாப் ஹம்ஸா தலைமையில் நடைபெறும்  இந்நிகழ்வில் மௌலவி எம்.இக்ராம் அல்பாஸி அவர்களும் அஷ்ஷெய்க் உமைர் தன்வீரி அவர்களும் விசேட உரை நிகழ்த்தவுள்ளார்.

முஸ்லிம் மஜ்லிஸின் பொருளாளர் சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி என்.ஏ.டி. ஜயசிங்க அவர்களின் வழிகாட்டலில் கடந்த வருடம் முதல் நடைபெற்று வரும் இந்த இப்தார் நிகழ்வு இந்த வருடமும் பஹன மீடியாவின் ஒத்துழைப்புடன் நடைபெறுகிறது.

இம்முறை இப்தாருக்கு முஸ்லிம் எய்ட், SFRD, அல் இக்மா சமூக சேவை நிறுவனம், பஹன மீடியா நிறுவனங்களும் மற்றும் பல தனவந்தர்களும் நிதி அனுசரணை வழங்கியிருந்தனர்.

பல்கலைக்கழக சமூகத்தில் அனைத்து இன மாணவர்களையும் ஒன்றிணைக்கும் வகையில் இந்த ‘இப்தார் அல் வஹ்தா’ நிகழ்வு இரண்டாவது முறையாக நடைபெறுகிறது.

Popular

More like this
Related

பேரிடரால் பாதிக்கப்பட்ட இலங்கை மக்களுக்கு ரியாதிலுள்ள SLISR மாணவர்களினால் மனிதாபிமான உதவி.

 ‘டிட்வா’ இயற்கைப் பேரழிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுமுகமாக சவூதி அரேபியாவின் ரியாதிலுள்ள...

பண்டிகை காலத்தை முன்னிட்டு விசேட பாதுகாப்பு நடவடிக்கைகள்!

கிறிஸ்துமஸ் பண்டிகை காலத்தை முன்னிட்டு நாடு முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் மேம்படுத்தப்பட்டுள்ளதாக...

மாலைதீவில் தமது பணியை ஆரம்பித்த ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ்

ஸ்ரீ லங்கன் ஏர்லைன்ஸ் விமான சேவையானது மாலைத்தீவின் மாலேவில் உள்ள வேலானா...

பாராளுமன்ற அலுவல்கள் குழுவிற்கு நீண்ட விடுமுறை

சபாநாயகரின் அனுமதியுடன்பாராளுமன்ற ஊழியர்களுக்கு டிசம்பர் 22 மற்றும் 23 ஆம் திகதிகளில்...