கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் பொலன்னறுவை, நுவரெலியா மற்றும் மாத்தளை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
குறித்த விடயத்தை வளிமண்டலவியல் திணைக்களம் இன்று (17) வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
மேல், சப்ரகமுவ, தென் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி மாவட்டத்திலும் பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் இடைக்கிடையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என திணைக்களம் தெரிவித்துள்ளது.
சில இடங்களில் 50 மி.மீக்கும் அதிகளவான மழை பெய்யக்கூடும். மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டம் நிலவக்கூடும்.
இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடும்.