இலங்கையில் முதலாவது விந்தணு வங்கி காசல் மகப்பேற்று வைத்தியசாலையில் திறந்து வைப்பு!

Date:

இலங்கையில் முதல் விந்தணு வங்கி கொழும்பு காசல் மகப்பேற்று வைத்தியசாலையில் நிறுவப்பட்டுள்ளது.

மலட்டுத்தன்மையால் பாதிக்கப்பட்டுள்ள தம்பதியினருக்கு தீர்வு வழங்கும் நோக்கில் விந்தணு வங்கி அமைக்கப்பட்டுள்ளதாக கொழும்பு காசல் மகப்பேற்று வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் அஜித் தன்தநாராயணா தெரிவித்தார்.

மேலும்  இந்த சேவை கடுமையான தனியுரிமை மற்றும் இரகசியத்தன்மையின் கீழ் இயக்கப்படும். நன்கொடையாளர் மற்றும் பெறுநரின் இரகசியத்தன்மை இரண்டும் முழுமையாகப் பாதுகாக்கப்படும் என்று அவர் உறுதியளித்தார்.

பாதுகாப்பு மற்றும் தரத்தை உறுதி செய்வதற்காக, தானம் செய்வதற்கு முன்பு தொடர்ச்சியான மருத்துவ பரிசோதனைகளுக்கு உட்படுவார்கள்.

இலங்கையில் இனப்பெருக்க சுகாதார சேவைகளில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்திற்கு பங்களிக்கும் வகையில், விந்தணு தானம் செய்வதன் மூலம் இந்த முயற்சியை ஆதரிக்குமாறு மருத்துவமனை பொதுமக்களிடம் அழைப்பு விடுத்துள்ளது.

விந்தணு வங்கி என்பது செயற்கை கருவூட்டல் அல்லது செயற்கை கருத்தரித்தல் (IVF) போன்ற கருவுறுதல் சிகிச்சைகளில் பயன்படுத்துவதற்காக தானம் செய்யப்பட்ட விந்தணுக்களை சேகரித்து, சேமித்து, வழங்கும் ஒரு வசதி ஆகும்.

ஆண் மலட்டுத்தன்மை பிரச்சினைகள் உள்ளவர்கள் அல்லது கருத்தரிக்க விரும்பும் ஒற்றைப் பெண்கள் உட்பட தனிநபர்கள் மற்றும் தம்பதிகளுக்கு உதவ இது உலகம் முழுவதும் பரவலாகப் பயன்படுத்தப்படுகின்றது.

குழந்தையின்மையால் அவதிப்படும் பெற்றோருக்கு உதவ விரும்பினால், விந்தணு வங்கியின் தொலைபேசி இலங்கங்களுடன் தொடர்பை ஏற்படுத்தலாம் என அஜித் தன்தநாராயணா தெரிவித்தார். தொடர்புகொள்ள வேண்டிய தொலைபேசி இலக்கங்கள் 0112 67 89 99 / 0112 67 22 16.

Popular

More like this
Related

திரைப்பட கூட்டுத்தாபனத்தை மாற்றியமைக்க திட்டம்: அமைச்சரவை அனுமதி

இலங்கை திரைப்படக் கூட்டுத்தாபனத்தின் சட்டத்தை நீக்கி புதிய சட்டத்தை அறிமுகப்படுத்த அமைச்சரவை...

இலங்கையில் முதன்முறையாக உலக கெரடோகோனஸ்  தினம் அனுஷ்டிப்பு.

உலக கெரடோகோனஸ் தினம் (World Keratoconus Day ) ஒவ்வொரு ஆண்டும்...

இலங்கை மேசைப் பந்து விளையாட்டு வரலாற்றில் தாவி சமரவீர புதிய மைல்கல்

11 வயதிற்குட்பட்ட உலக மேசைப் பந்து தரவரிசையில் இலங்கையைச் சேர்ந்த தாவி...

டெல்லி கார் குண்டு வெடிப்பு: 13 பேர் கொல்லப்பட்டதையடுத்து பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் அமுலில்.

டெல்லியின் வரலாற்றுச் சிறப்புமிக்க செங்கோட்டைப் பகுதிக்கு அருகே இன்று நடந்த சக்திவாய்ந்த...