ரமழானில் அல்குர்ஆனை முழுமையாக ஓதிய மாணவர்களுக்கு கௌரவம்: வாழைத்தோட்டம் அல்-மஸ்ஜிதுல் முனீர் மஅல் மத்ரஸாவின் முன்மாதிரி

Date:

கொழும்பு வாழைத்தோட்டம் அல்-மஸ்ஜிதுல் முனீர் மஅல் மத்ரஸாவில், புனித நோன்பு காலத்தில் இரவு வேளையில் புனித அல்-குர்ஆனை முழுமையாக ஓதி முடித்த மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு கடந்த 28ஆம் திகதி இடம்பெற்றது.

இந்த நிகழ்வு மத்ரஸாவின் தலைவர் அல்-ஹாஜ் ஜஹாங்கிர் அலியின் தலைமையில் நடைபெற்றது.

நிகழ்வின் ஆரம்ப உரையை மத்ரஸாவின் ஆலோசகர் மௌலவி சிஹாப்தீன் நிகழ்த்தினார், அதேவேளை விசேட உரையை மத்ரஸாவின் அதிபர் ரயிசுத்தீன் வழங்கினார். தலைவர் ஜஹாங்கிர் அலி தலைமையுரையினை நிகழ்த்தியதுடன், நன்றியுரையை இல்யாஸ் ஹாஜி வழங்கினார்.

இந்த சிறப்புமிக்க நிகழ்வில் மத்ரஸாவின் நிர்வாக சபை உறுப்பினர்கள், முன்னாள் தலைவர்கள், உறுப்பினர்கள், பெற்றோர்கள், மாணவர்கள், மற்றும் நலன் விரும்பிகள் கலந்துகொண்டனர்.

நிகழ்வின் ஒரு பகுதியாக மாணவர்கள் ஹஸீதா, மூன்று மொழிகளிலும் இஸ்லாமிய பேச்சுக்கள், இஸ்லாமிய கீதங்களை வழங்கினர். இதன் பின்னர் குர்ஆன் ஓதலில் ஈடுபட்ட அனைத்து மாணவ, மாணவிகளுக்கும் நினைவுப்பரிசுகள் வழங்கப்பட்டன.

தகவல்- ஏ.எஸ்.எம். ஜாவித்

Popular

More like this
Related

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா (ACJU) – பஹன மீடியா குழுமத்திற்குமிடையே நடைபெற்ற சினேகபூர்வ சந்திப்பு!

கடந்த ஏழு ஆண்டுகளுக்கும் மேலாக "தூய இலங்கை" எனும் மகுடம் தாங்கி...

வாகன இறக்குமதி மூலம் 512.5 பில்லியன் ரூபாய் வரி வருமானம்!

2026 ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் 316,000 வாகனங்கள் இறக்குமதி...

சமச்சீரற்ற ஒத்திசைவு: இலங்கை தனது பன்முகத்தன்மையை ஒரு பலமாக மாற்ற முடியுமா?

-ரிசா யெஹியா சிரேஷ்ட பொறியியலாளர். இலங்கையில் மீண்டும் மீளும் சமூகத் தகராறுகள் உடனடி பிரச்சினையை...

ஜப்பான், மத்திய கிழக்கில் புதிய வேலைவாய்ப்புகள்!

தென் கொரியா மற்றும் இஸ்ரேலில் ஏற்கனவே வழங்கப்பட்டு வரும் வேலைவாய்ப்புகளுக்கு மேலாக,...