அமெரிக்காவுடன் நடந்த பேச்சுவார்த்தையில் 30 நாட்கள் போரை நிறுத்தி ரஷ்யாவுடன் அமைதியாக செல்ல உக்ரைன் ஒப்புக்கொண்டுள்ளது.
இதுதொடர்பாக அமெரிக்கா – உக்ரைன் இடையே 5 முக்கிய நிபந்தனைகள் பேசப்பட்டது. இதற்கு ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புதின் ஓகே சொல்லும் நிலையில் போர் நிறுத்தம் அமலுக்கு வரும்.
ஆனால் அமெரிக்கா – உக்ரைன் நிபந்தனைகளை ரஷ்யா ஏற்குமா? என்ற பெரிய கேள்வி எழுந்துள்ளது.
இதையடுத்து அமெரிக்கா – ரஷ்யா வெளியுறவுத்துறை அமைச்சர்களும் சவூதி அரேபியாவில் பேசினர். அதேபோல் நேற்றைய தினம் சவூதி அரேபியாவின் ஜெட்டா நகரில் அமெரிக்கா – உக்ரைன் இடையே பேச்சுவார்த்தை நடந்தது.
உக்ரைன் – அமெரிக்கா பேச்சு இதில் அமெரிக்கா சார்பில் வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியா, அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மைக் வால்ட்ஸ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
உக்ரைன் சார்பில் ஜனாதிபதி விளாடிமிர் ஜெலன்ஸ்கியின் Chief of Staff பொறுப்பில் உள்ள அன்ட்ரி எர்மார்க் உள்ளிட்ட பிரதிநிதிகள் பங்கேற்றனர்.
இந்த பேச்சுவார்த்தையில் 30 நாட்கள் தற்காலிகமாக போரை நிறுத்த உக்ரைன் ஓகே கூறியது.
4வது போர் நிறுத்த பேச்சுவார்த்தையில் ஐரோப்பா ஒருபகுதியாக இருக்க வேண்டும்.
5வது கனிமவள ஒப்புதல் தொடர்பாக ஒப்பந்தம் விரைவில் மேற்கொள்ளப்படும். இதன்மூமல் அமெரிக்கா – உக்ரைன் இடையே நீண்டகால உறவை பேண வேண்டும். உக்ரைனின் பாதுகாப்பு மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கு அமெரிக்கா உதவி செய்ய வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது.
இந்த 5 ஒப்பந்தங்களும் அமெரிக்கா – உக்ரைன் பேச்சுவார்த்தையில் பேசப்பட்டுள்ளது. இதற்கு அமெரிக்கா ஒப்புக்கொண்டுள்ளது. இதுதொடர்பாக அமெரிக்கா சார்பில் ரஷ்யாவிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளது.
ஆனால் இப்போது இருக்கும் கேள்வி அமெரிக்கா – உக்ரைன் பேச்சுவார்த்தையில் நடந்த ஒப்பந்தங்களை ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புதின் ஏற்றுக்கொள்வாரா? என்பது தான்.
உண்மையில் இதில் பெரிய சிக்கல் இருப்பதாக கூறப்படுகிறது. அதாவது ரஷ்யாவுக்கும், உக்ரைனுக்கும் இடையே போர் தொடங்க முக்கிய காரணமே நேட்டோ அமைப்பு தான்.
ரஷ்யாவுக்கும், உக்ரைனுக்கும் நீண்டகாலமாக எல்லை பிரச்சனை உள்ளது. இதனால் ரஷ்யாவை சமாளிக்க நேட்டோ அமைப்பில் உக்ரைன் சேர முயற்சித்தது.
நேட்டோ அமைப்பு என்பது அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் அமைப்புகள் அங்கம் வகிக்கும் ஒரு பாதுகாப்பு படையாகும். இந்த நேட்டோவில் ஒரு நாடு உறுப்பினராகும் பட்சத்தில் அந்த நாட்டின் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் நேரடியாக நேட்டோ களமிறங்கும்.
இதனால் பலம் வாய்ந்த ரஷ்யாவை சமாளிக்க நேட்டோவில் இணைய உக்ரைன் நினைத்தது. ஆனால் நேட்டோவில் உக்ரைன் இணைந்தால் அமெரிக்கா, ஐரோப்பிய படை வீரர்கள் ரஷ்யா – உக்ரைன் எல்லையில் நிலைநிறுத்தப்படலாம். இது ரஷ்யாவின் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கும் என்று ரஷ்யா நினைத்தது.