தலைமறைவான தேசபந்து தென்னகோன்!

Date:

முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் தலைமறைவாகியுள்ளதாக பொது பாதுகாப்பு பிரதி அமைச்சர் சுனில் வட்டகல தெரிவித்துள்ளார்.

இன்றைய நாடாளுமன்ற விவாத்தில் கலந்து கொண்ட போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில், அவரை கைது செய்ய காவல்துறையினர் நடவடிக்கை எடுத்து வருவதாகவும் பிரதி அமைச்சர் மேலும் கூறியுள்ளார்.

மாத்தறை நீதவான் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் பேரில், முன்னாள் காவல்துறை மா அதிபர் தேசபந்து தென்னகோனை  கைது செய்வதற்கான விசாரணைகளை குற்றப் புலனாய்வுத் திணைக்களம் தொடங்கியுள்ளது.

அதன்படி, கொழும்பு உட்பட அவர் தங்கியிருந்ததாகக் கூறப்படும் நான்கு வீடுகள் நேற்று (28) தேடுத்ல மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், அந்த வீடுகளில் எதிலும் அவர் தங்கியிருக்கவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

வெலிகம பெலேன பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றின் முன் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் உட்பட 8 பேரை கைது செய்து முன்னிலைப்படுத்துமாறு மாத்தறை நீதவான் நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டிருந்தது.

Popular

More like this
Related

தபால் ஊழியர்கள் நாளை பணிப்புறக்கணிப்பு

இலங்கை தபால் ஊழியர்கள் நாளை (17) வேலைநிறுத்தப் போராட்டத்தை ஆரம்பிக்கவுள்ளதாக அறிவித்துள்ளனர். தபால்...

புதிய பொலிஸ் மா அதிபரின் வாட்ஸ் அப் எண்ணுக்கு ஒரே நாளில் 2000 முறைப்பாடுகள்

புதிய பொலிஸ் மா அதிபரின் வாட்ஸ் அப் எண்ணுக்கு ஒரே நாளில்...

நாட்டின் சில பகுதிகளில் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும்

சப்ரகமுவ மற்றும் மேல்  மாகாணங்களிலும் அத்துடன் கண்டி , நுவரெலியா,காலி மற்றும்...

சபரிமலை யாத்திரை இலங்கை அரசாங்கத்தின் அங்கீகரிக்கப்பட்ட யாத்திரையாக பிரகடனம்

இந்தியாவின் கேரளாவில் உள்ள புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு புனித யாத்திரை...