ஒஸ்கார் விருது வென்ற பலஸ்தீனிய இயக்குநரை விடுதலை செய்தது இஸ்ரேல் இராணுவம்

Date:

‘நோ அதர் லேண்ட்’ என்ற பலஸ்தீன ஆவணப்படத்திற்காக ஒஸ்கார் விருது பெற்றவர் இணை இயக்குநர் ஹம்தான் பல்லாலை இஸ்ரேலால் ஆக்கிரமிப்பு செய்துள்ள பலஸ்தீனத்தின் மேற்கு கரையில் இஸ்ரேல் இராணுவத்தால் கைது செய்யப்பட்டார்.

தற்போது இஸ்ரேல் இராணுவம் இவரை விடுதலை செய்துள்ளது.

இஸ்ரேலிய குடியேறிகள் குழுவால் தாக்கப்பட்ட நிலையில், ஹம்தான் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அவர் சென்ற ஆம்புலன்ஸை இஸ்ரேலிய வீரர்கள் தாக்கி, ஹம்தானை கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். இஸ்ரேல் இராணுவத்தின் இந்த நடவடிக்கைக்கு கடும் கண்டனங்கள் எழும்பின.

இந்த சம்பவம் தொடர்பாக அறிக்கை வெளியிட்ட இஸ்ரேல் இராணுவம்,

“நாங்கள் அந்த இடத்தை அடைந்தபோது பலஸ்தீனியர்களுக்கும் இஸ்ரேலியர்களுக்கும் இடையில் வன்முறை மோதல் நடந்துகொண்டிருந்தது. அவர்கள் ஒருவருக்கொருவர் கற்களை வீசிக் தாக்கிக் கொண்டிருந்ததனர்.

பலஸ்தீனியர்கள்  இஸ்ரேலிய பொதுமக்கள் மீது கற்களை எறிந்து அவர்களின் வாகனங்களை சேதப்படுத்தியதால் சண்டை தொடங்கியுள்ளது. பலர் பாதுகாப்புப்படையினர் மீது கற்களை வீசியதை அடுத்து, மூன்று பலஸ்தீனியர்களும் ஒரு இஸ்ரேலியரும் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டனர்” எனத் தெரிவித்திருந்தது.

இந்த நிலையில் ஹம்தான் பல்லால் விடுதலை செய்யப்பட்டுள்ளார். மேற்கு கரையில் உள்ள கிர்யாத் அர்பா காவல் நிலையத்தில் இருந்து வெளியேறியதை பத்திரிகையாளர்கள் உறுதி செய்துள்ளனர்.

அவருடன் மேலும் இரண்டு பேரும் விடுவிக்கப்பட்டுள்ளனர். பல்லால் முகத்தில் கடுமையான காயமும், அவர் அணிந்திருந்த ஆடையில் இரத்தக்கறை படிந்திருந்ததாகவும் பத்திரிகையாளர்கள் தெரிவித்தனர்.

Popular

More like this
Related

மத மற்றும் கலாசார விவகாரங்களுக்கான புதிய பிரதி அமைச்சராக முனீர் முலஃபர் கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்

மத மற்றும் கலாச்சார விவகாரங்களுக்கான புதிய பிரதி அமைச்சராக  முனீர் முலாஃபர்...

பாலின சமத்துவத்தை முழுமையாக அடைய தொடர்ச்சியான அர்ப்பணிப்பு தேவை: பிரதமர்

பெண்கள் மற்றும் பெண் பிள்ளைகளின் உரிமைகள் மற்றும் நல்வாழ்வை முன்னேற்றுவதற்கும், சமத்துவம்...

கல்வி சீர்திருத்தங்களின் கீழ் பாடசாலை நேரம் நீடிப்பு: கல்வியமைச்சு

நடைமுறைப்படுத்தப்படவுள்ள கல்வி சீர்திருத்தங்களின் கீழ் பாடசாலை நேரம் பிற்பகல் 2 மணி...

கல்கிஸ்ஸை சட்டத்தரணி தாக்குதல் சம்பவம்; பொலிஸ் அதிகாரிக்கு பிணை

கல்கிஸ்ஸை நீதிமன்ற வளாகத்திற்குள் பொலிஸ் அதிகாரியொருவர் சட்டத்தரணியொருவரைத் தாக்கிய சம்பவம் தொடர்பாக...